"கமல் என்றால் எனக்கு அப்போது இருந்தே சிறிய பயம் இருக்கும்" - ஏ.ஆர்.முருகதாஸ்

#TamilCinema #Director #Actor
Mani
1 year ago
"கமல் என்றால் எனக்கு அப்போது இருந்தே சிறிய பயம் இருக்கும்" - ஏ.ஆர்.முருகதாஸ்

அஜித்தின் தீனா படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், விஜயகாந்த் நடித்த ரமணா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் '1947- ஆகஸ்ட் 16'. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக இருந்த என்.எஸ்.பொன்குமார் இயக்குகிறார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கமலை வைத்து படம் தயாரிக்க விருப்பமா என்று கேட்டுள்ளார். என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “பொதுவாக எனக்கு கமல் மீது கொஞ்சம் பயம் இருந்து கொண்டே இருக்கும்.ஆனால் ஒவ்வொரு இயக்குனரும் கமலை வைத்து படம் இயக்க விரும்புகிறார்கள்.

கமல் சாரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள் அந்த படத்தின் மூலம் தங்களின் சிறந்த கேரியர் சாதனையை செய்வார்கள். திரையுலகில் டாப் இருபது இயக்குனர்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் சிறந்த கேரியர் சாதனை கமல் சாரோட படம்தான்.என்று கூறினார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!