கொத்து கொத்தாக முடி கொட்டுதா..? இந்த பிரச்சனை கூட காரணமாக இருக்கலாம்.

#Healthy #Health #Health Department #Hair
Mani
1 year ago
கொத்து கொத்தாக முடி கொட்டுதா..? இந்த பிரச்சனை கூட காரணமாக இருக்கலாம்.

புகழ்பெற்ற தோல் மருத்துவர் டாக்டர் அபிஷேக் பிலானி மன அழுத்தத்திற்கும் முடி உதிர்வுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விவாதிக்கிறார். மருத்துவத் துறையில் சமீபத்திய ஆராய்ச்சியின் படி, கோவிட் நோய்த்தொற்றுக்குப் பிறகு முடி உதிர்தல் பெரும்பாலான நிகழ்வுகள் டெலோஜென் எஃப்ளூவியம் என்ற நிலையிலிருந்து உருவாகின்றன என்று டாக்டர் அபிஷேக் கூறினார். டெலோஜென் எஃப்ளூவியம் என்பது ஒரு மன அழுத்த அனுபவத்திற்குப் பிறகு முடி உதிரும் ஒரு மீளக்கூடிய நிலை. கோவிட் மூலம் ஏற்படும் மன அழுத்தம் ஒருவரின் உடலை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது மற்றும் வளர்ச்சி-ஓய்வு சுழற்சியை சீர்குலைக்கிறது.

ஒரு நபர் கோவிட் தொற்றிலிருந்து மீண்ட பிறகு இந்த ப்ராசஸ்ஸ் தொடங்குகிறது. இது தொற்றால் பாதிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு தீவிர முடி உதிர்தல் பிரச்னை ஏற்பட வழிவகுக்கிறது. மேலும் இந்த கண்டிஷன் ரிவர்சிபிள் மற்றும் பொதுவாக எந்த கூடுதல் மருந்தும் இல்லாமல் தானாகவே நின்றுவிட கூடியது. ஆனால் நம் தலைமுடி பிரச்சனைகள் மன அழுத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை நாம் எப்படி அறிந்து கொள்வது..? இதனை விளக்குகிறார் டாக்டர் அபிஷேக்.

நம் உடலில் ஸ்ட்ரஸ் தோன்ற பல வழிகள் உள்ளன. மன அழுத்தமானது அடிக்கடி முடி உதிர்தல் மற்றும் முடி நரைத்தல் உள்ளிட்டவற்றுடன் இருக்கும். ஒருவேளை நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளானால், உங்கள் தலைமுடி உடையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம், முடியின் அளவு குறைவாக இருக்கும் மற்றும் ரஃப்பாக மற்றும் ட்ரையாக இருக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!