காஜல் அகர்வால்: தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு, ஹிந்தி திரையுலகில் குறைவு!

#TamilCinema #Cinema #Actress #Actor #Tamil
Mani
3 years ago
காஜல் அகர்வால்: தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு, ஹிந்தி திரையுலகில் குறைவு!

திருமணமாகி ஆண் குழந்தைக்கு அம்மாவான காஜல் அகர்வால் சிறிது இடைவேளைக்கு பிறகு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

இதன் ஒரு பகுதியாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக வயதான வேடத்தில் காஜல் அகர்வால் நடித்துவருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஹிந்தி தான் எனது தாய் மொழி. ஹிந்தி திரைப்படங்களைப் பார்த்து தான் வளர்ந்தேன். ஆனால் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு, ஹிந்தியில் குறைவு.

அதனால் தான் தென்னிந்திய சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். உலக அளவில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்ற காரணத்தால். நிறைய பேர் ஹந்தியிலிருந்து தங்கள் கேரியரை துவங்க விரும்புவர்.

ஆனால் தென்னிந்தியாவில் திறமையான கலைஞர்கள் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்த படங்கள் வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4