சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் தன்மையுடையவரா நீங்கள்? இதோ அதற்கான தீர்வு.....

#ஆரோக்கியம் #உணவு #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #meal #Antoni #Theva #Antoni Thevaraj
சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் தன்மையுடையவரா நீங்கள்? இதோ அதற்கான தீர்வு.....

பலர் உணவு சாப்பிட்டவுடன் சிறிது நேரத்தில் வயிற்றைக் கலக்கி மலசல கூடத்திற்கு செல்வார்கள். இவ்வாறு சாப்பிட்டவுடன் மலம் கழிக்க ஏன் செய்கிறார்கள் என்று சிந்தித்தீர்களா? அப்படியாயின் இந்தப் பதிவு உங்களுக்கே...ஏன் சாப்பிட்ட உடன் மலம் கழிக்கிறோம்? அதற்கான தீர்வு என்ன? என்பதை பார்க்கலாம்.

சாப்பிட்டவுடன் மலம் வர காரணம்:

சாப்பிட்ட உடன் மலம் கழிப்பதை கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ் என்று அழைக்கிறோம். சாப்பிட்ட உணவு வயிற்றுக்குள் சென்றதும் ஹார்மோன்கள் சுரக்கும். உணவு செரிமானம் ஆனதும் மலக்குடலுக்கு சென்று மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

உணவு ஒவ்வாமை, சிலருக்கு கணையம் சரியாக வேலை செய்யாமை,  அதனால் கொழுப்பு சமிபாடடைய முடியாத நிலையில் உடனடியாக மலம் கழிக்க தோன்றும்.

சாப்பிட்ட உடன் மலம் கழிப்பதற்கு தீர்வு:

  • சாப்பிட்ட உடன் மலம் கழிப்பவர்கள் முதலில் உணவு முறையை சரியாக எடுத்து கொள்ளவும்.
     
  • எண்ணெய் அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளையும் சாப்பிட கூடாது.
     
  • வெண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ள உணவை சாப்பிட கூடாது. பால் மற்றும் பால் சேர்த்த உணவுகளை அதிகம் சேர்க்க கூடாது.
     
  • புதிதாக சமைத்த உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் சமைத்ததை மதியம் அல்லது நேரம் சென்று சாப்பிட கூடாது.
     
  • காய்கறிகள், பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும். உணவை மூன்று வேலையும் சரியாக சாப்பிட வேண்டும்.
     
  • மனிதர்களுக்கு இரவு உறக்கம் ரொம்ப முக்கியமானது. அதிலும் சாப்பிட்ட உடன் மலம் கழிப்பவர்கள் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
     
  • மன பதற்றத்தை தவிர்க்க வேண்டும். மன உளைச்சல் உள்ளவர்களுக்கு இரைப்பையில் அமிலம் அதிகமாக சுரக்கும். இதன் காரணமாக கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ் பிரச்சனை ஏற்படும்.
     
  • புகை பிடித்தல் மற்றும் மது குடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

இவற்றை நீங்கள் பின்பற்றினாலே சாப்பிட்ட உடன் மலம் கழிப்பதை தவிர்க்கலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!