தைரொயிட் நோயை எவ்வாறு உணவின் மூலம் வெற்றி கொள்வது?

#ஆரோக்கியம் #உணவு #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Food #Antoni #Theva #Antoni Thevaraj
தைரொயிட் நோயை எவ்வாறு உணவின் மூலம் வெற்றி கொள்வது?

நவீன யுகத்தின் அதிகரித்து வரும் நோய்களில் தைரொய்டும் ஒன்றாகும். இது ஆண், பெண் அனைத்து வயதினரையும் தாக்கும். முக்கியமாக தைரொய்ட் பெண்களுக்கு வந்தால் சற்றுப் பயப்படக்கூடியதாகும். இது அயடின் குறைபாட்டால் பெருதும் வருகிறது. மேலும் பரம்பரையலகு, மனவழுத்தம் போன்றவையும் இந்தக் கண்டக்கழலையை உருவாக்கும்.

தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் ஹைப்போ தைராய்டிஸம் என்றும், தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் ஹைப்பர் தைராய்டிஸம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 தைரொய்டு சுரப்பியை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது கடினம். இதன் பிரச்சனை அதிகரிக்கும் போது தான் கழுத்தின் முன் பகுதியில் ஒரு வட்டமான கட்டி போல் தெரியும். இந்த நோயினை சில உணவு முறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். அதுதான் என்னவென இந்தப்பதிவு தெரிவிக்கவுள்ளது.

தைரொய்டு அறிகுறிகள்:

  • மலசிக்கல்
  • உடல் எடை குறையும் அல்லது அதிகரிக்கும்
  • சோம்பேறியாக இருத்தல்
  • முடி உதிர்தல்
  • உடல் மற்றும் மன வளர்ச்சி ஏற்படாமல் இருப்பது
  • உடல் குளிர்ந்த நிலையில் இருப்பது
  • பதற்ற நிலையில் காணப்படுவது.

தைரொய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

பாஸ்ட் புட்: 

பாஸ்ட் புட் என தெரு அங்காடிகளில் விற்கும் உணவுகளில் கெட்ட கொழுப்பும், உப்பும் அதிகம் காணப்படுவதனால் இதனைத் தவிர்த்தல் நன்று. தைரொய்ட் உள்ளவர்கள் சிறிது இதனை உட்கொண்டாலும் விளைவு அதிகமாக இருக்கும். எனவே இந்த வகை உணவுகளை தவிருங்கள்.

சல்பர் தீமைகள்:

சோளம், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றில் சல்பர் அதிகம் இருப்பதால் இந்த உணவு பொருட்களில் தைராய்டு சுரப்பியால் அயோடினை உட்கொள்ள முடியாது. எனவே இதை தவிர்ப்பது நல்லது.

முட்டைகோஸ் தீமைகள்: 

முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகள் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் தைரொய்டு நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. எதனால் என்றால் முட்டைகோஸ், காலிபிளவர், ப்ராக்கோலி போன்ற காய்கறிகளில் அயோடின் உட்கொள்வதை பாதித்து ஹார்மோன்களில் பாகுபாடு உண்டாக்கும். எனவே இது மாதிரியான காய்கறிகளை தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள உணவுகளை தைராய்டு உள்ளவர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்கும்போது தைராய்டு நோயை வெல்லலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!