அடினோவைரஸ் என்றால் இதுதானா! - அதன் அறிகுறிகள்
#Virus
#adenovirus
#Disease
#symptoms
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
1 year ago
அடினோவைரஸ் என்பது என்ன?
இது மனித மூளை அமைப்பு, குடல், சிறுநீர் பாதை மற்றும் நுரையீரலின் சுவர்களை பாதிக்கும் வைரஸ் ஆகும்.
இதுவரையிலும் மனிதர்களை பாதிக்கக்கூடிய சுமார் 50 வகை அடினோவைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சாதாரண ஜலதோஷம் முதல் தீவிரமான சுவாச பிரச்சனைகள் வரை நோய் தீவிரத்தை ஏற்படுத்தலாம்.
நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளவர்கள், ஏற்கனவே சுவாசம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருப்பவர்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.
தோல் மூலமாகவும், காற்று, நீர் மற்றும் மலம் மூலமாகவும் பரவக்கூடியது.
அறிகுறிகள்
- சளி, காய்ச்சல்
- தொண்டை வலி, வயிற்று வலி
- கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி
- நிமோனியா, நுரையீரல் தொற்று
- வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் இதனை சரிசெய்யலாம், மூக்கு வாய் பகுதியை அடிக்கடி தொடாமல் பார்த்துக் கொள்ளவும், வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
- அறிகுறிகள் தீவிரமாகும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.