செல்லும் இடமெல்லாம் அவர் ஒரு குடிகாரர்- விளாசித் தள்ளிய வடிவேலு

#Cinema #TamilCinema #Actor #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prabha Praneetha
3 years ago
செல்லும் இடமெல்லாம் அவர் ஒரு குடிகாரர்- விளாசித் தள்ளிய வடிவேலு

விஜயகாந்தை குடிகாரர் என்று சொல்லும் வடிவேலு, நன்றாகவே குடிப்பார் என்றும் அவர் வடிவேலு அல்ல குடிவேலு எனவும் இயக்குனர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார். இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தபோது அவருக்கும் அப்படத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதையடுத்து வடிவேலு சில ஆண்டுகள் சினிமா பக்கம் தலைகாட்ட முடியாமல் போனது.

இதனிடையே கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் வடிவேலு. அப்போது அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து பிரச்சாரம் செய்தார்.

செல்லும் இடமெல்லாம் அவரை ஒரு குடிகாரர் என்றும் விளாசித் தள்ளினார் வடிவேலு. அப்போது வடிவேலுவின் பிரச்சாரம் பரபரப்பாக பேசப்பட்டது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4