நாம் அனைவரும் பயன்படுத்தும் பருப்பின் முழு ஊட்டச்சக்தியினையும் பெற அதனை எவ்வாறு சமைக்க வேண்டும்?
பருப்பானது ஒரு புரதம் அதிகம் நிநை்த ஒரு தானியம் ஆகும். இது சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இதன் ஊட்டச்சத்துக் குறையாமல் எப்படி சமைத்தால் ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கப்படும்.
அனைவருமே பருப்பை கழுவிட்டு தான் சமைப்பார்கள். ஆனால் பருப்பை ஊற வைத்து தான் சமைக்க வேண்டும் யாருக்காவது தெரியுமா.? ஆமாம் நீங்கள் பருப்பை சமைப்பதற்கு முன்னால் ஊற வைத்து சமையுங்கள்.
பருப்பை ஊற வைத்து சமைப்பதால் ஏற்படும் நன்மைகள்:
பருப்பை ஊற வைத்து சமைக்கும் பொழுது அதில் சேர்க்கப்பட்டிருக்கும் இரசாயனங்கள் தண்ணீரில் நீங்கி விடும். பருப்புகளில் ஒலிகோசாக்கரைடுகள் என்ற செல் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதில் முக்கியமாக உடல் தசைகளில் வீக்கம் மற்றும் வாயு பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் பருப்பை ஊறவைத்து சமையுங்கள்.
மேலும் பருப்பை ஊறவைத்து சமைப்பதினால் கால்சியம் மற்றும் இரும்பு சத்து நம் உடலுக்கு கிடைக்கிறது. எல்லா வகை பருப்புகளும் செரிமானம் ஆக கூடியது தான். ஆனால் ஊற வைத்து சமைக்கும் பொழுது செரிமானம் சக்தியை பலப்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் பருப்பை ஊற வைத்து சமைப்பதினால் விரைவாக வெந்துவிடும். சமையலை சீக்கிரமாக செய்துவிடலாம்.
பருப்பு ஊற வைத்த தண்ணீரை மறந்தும் கூட சமையலுக்கு பயன்படுத்தி விடாதீர்கள். ஏனென்றால் பருப்பு ஊற வைத்த தண்ணீரில் பைடிக் அமிலம் அதிகம் உள்ளது. அதனால் சமையலுக்கு பயன்படுத்த கூடாது.
பருப்பு மட்டுமில்லை நீங்கள் எந்த பொருட்களை ஊற வைத்தாலும் அந்த தண்ணீரை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. ஏனென்றால் அதில் உள்ள இரசாயனம் மற்றும் கழிவுகள் தண்ணீருடன் கலந்துவிடுவதனால் அந்த தண்ணீரை பயன்படுத்துதல் உடலுக்கு கேடு தரும்.