இசப்கோல் மூலிகையை உட்கொள்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்.
இசப்கோல் என்பது பிளாண்டாகோ செடிகளின் விதைகளை இருந்து எடுக்கப்படுகிறது. இது சைலியம் உமி என்று அழைக்கப்படுகிறது. பல மருத்துவ குணங்களை கொண்டுள்ள, இது உமி வடிவிலும் மாத்திரைகள் வடிவிலும் உலகம் முழுவதும் விற்கப்படுகிறது. பல ஆரோக்கியங்களைக் கொண்டுள்ள இந்த இசப்கோலலை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம் நாம் இந்தப் பதிவிலிருந்து...
இசப்கோல் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
இந்த இசப்கோல் செடிகள் பொதுவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகிறது. இந்த இசப்கோல் என்பதை சைலியம் என்றும் அழைப்பார்கள். இது ஒரு இயற்கை தாவரம் என்று கூறப்படுகிறது. இந்த தாவரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய விதைகளில் இருந்து எடுக்கக்கூடிய உமி தான் இசப்கோல்.
இந்தியாவில் வணிக ரீதியில் வளர்க்கப்படும் இசப்கோல். மனிதனுக்கும் விலங்குகளிற்கும் அதிகளவு ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் புரதம், இரும்புசத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.
செரிமான பிரச்சனைகளை தடுக்க:
இது பெருங்குடல் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி இது மலசிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. குடல் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த:
இது உங்கள் உடம்பில் நார்சத்துக்களை சேர்க்க உதவுகிறது. இது உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகள் அதிகரிக்க உதவுகிறது. அதனால் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த இசப்கோல் இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது என்று மருத்துவ ஆய்வுகளில் கூறப்படுகிறது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த:
இந்த இசப்கோல் சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பயன்படுகிறது. இந்த இசப்கோலை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதால் நல்ல பயனளிக்கும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
உடல் எடையை குறைக்க:
இதில் நார்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. இது அதிக பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால் இது உடல் எடை இழப்பிற்கு காரணமாகிறது.