ரூ.100 கோடியில் உருவாகும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

#Actor #Actress #TamilCinema
Mani
3 years ago
ரூ.100 கோடியில் உருவாகும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகையான கீர்த்தி ஷெட்டி, "உபென்ன" படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, "ஷ்யாம் சிங்க ராய்" மற்றும் "தி வாரியர்" போன்ற படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக கஸ்டடி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஜெயம் ரவியின் 32வது படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்குகிறார். 100 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4