மங்குஸ்தான் பழங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
உடல் எடை கூட
நவீன மருத்துவ அளவுகோலின் படி ஒவ்வொரு மனிதரும் அவரின் உடல் உயரத்திற்கு ஏற்ற அளவில் உடல் எடை பெற்றிருக்கவேண்டும் என அறிவுறுத்துகிறது. ஒரு சிலர் சராசரி உடல் எடைக்கு கீழாக இருக்கின்றனர். இத்தகையவர்கள் சீக்கிரம் உடல் எடை கூட்ட அடிக்கடி மங்குஸ்தான் பழங்களை சாப்பிட வேண்டும். இதில் இதில் இருக்கும் சத்துகள் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.
கொலஸ்ட்ரால்
இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.
கண்பார்வை
நமது உடலின் முக்கிய உறுப்புகளான கண்களின் பார்வை திறன் தெளிவாக இருக்க வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியமாகும் மங்குஸ்தான்பழங்களில் இந்த சத்துக்கள் அனைத்தும் அதிகம் இருக்கின்றன. எனவே மங்குஸ்தான் பழங்களை தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது சாப்பிடுவது கண்பார்வை மேம்பட உதவும்.
சரும நலம்
வயதாவதாலும், ஊட்ட சத்தில்லாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் சிலருக்கு தோல் வறட்சி ஏற்பட்டு, தோல் சுருக்கங்களும், வயதான தோற்றமும் ஏற்படுகிறது. இப்படியான நிலையில் இருப்பவர்கள் மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும்.
வைட்டமின் சி
வைட்டமின் சி மங்குஸ்தான் பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. எனவே அனைத்து வயதினரும் மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.