இன்று மாலை வெளியானது PS2 படத்தின் ‘சிவோஹம்’

#Cinema #TamilCinema #2023 #IPL2023
Mani
3 years ago
இன்று மாலை வெளியானது PS2 படத்தின் ‘சிவோஹம்’

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியானது. அதேபோல் யூடியூபில் வெளியான அக நக, வீரா ராஜ வீர ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ”சிவோஹம்” பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4