2,500 கிலோகிராம் கொண்ட சோனுசூட் அரிசியின் குவியல் எல்லையற்ற அன்பின் வெளிப்பாடாகும்.
பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்தோர், ஏழைகள் மற்றும் பேருந்து வசதிகளை வழங்குவதற்காக ஏராளமான பணத்தை நன்கொடையாக அளித்துள்ளார். இதனால் அவர் நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ளார். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவ தனி அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். நடிகர் ஆக வேண்டும் என்ற ஆசையில் மும்பைக்கு வருபவர்களுக்கு உதவ தனி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸில், நடிகர் சோனு சூட்டின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு ஏக்கர் நிலத்தில் 2,500 கிலோகிராம் அரிசியைப் பயன்படுத்தி சோனு சூட்டின் படத்தை ரசிகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் வரைந்தனர். இந்த நிகழ்வின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் மிகவும் நெகிழ்ந்த சோனு சூட் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது தேவையில்லாத வேலை என சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த அரிசி அனைத்தும் என்ஜிஓ மூலம் பல ஏழை குடும்பங்களுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகி பாராட்டு குவிந்து வருகிறது.