டிசம்பர் 31-ம் தேதி நமக்குப் புத்தாண்டு இல்லை, 14-ம் தேதி கொண்டாடப்படும் தமிழ்ப் புத்தாண்டுதான் நமக்குப் புத்தாண்டு - நடிகை நமீதா

#Actress
Mani
3 years ago
டிசம்பர் 31-ம் தேதி நமக்குப் புத்தாண்டு இல்லை, 14-ம் தேதி கொண்டாடப்படும் தமிழ்ப் புத்தாண்டுதான் நமக்குப் புத்தாண்டு  -  நடிகை நமீதா

நடிகையும், பா.ஜ.க  செயற்குழு உறுப்பினருமானநமீதா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ் புத்தாண்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் புத்தாண்டை கொண்டாடுகிறீர்கள். உற்சாகமாக எழுந்து குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்று கடவுள் அருள் பெறுங்கள். அதன் பிறகு, உங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.

தமிழ் புத்தாண்டை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடுங்கள். அதுதான் நமது கலாச்சாரம். அதுதான் நமது பாரம்பரியம். டிசம்பர் 31-ம் தேதி நமக்குப் புத்தாண்டு இல்லை, 14-ம் தேதி கொண்டாடப்படும் தமிழ்ப் புத்தாண்டுதான் நமக்குப் புத்தாண்டு. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நமிதா குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்தாலும் தமிழ் ரசிகர்களை அதிகம் நேசிக்கிறார். தமிழ் ரசிகர்களை பொதுவாக "மச்சான்" என்றுதான் அழைப்பார்கள், இந்நிலையில் அவர் தமிழ் புத்தாண்டு குறித்து வீடியோவில் பேசியது ரசிகர்களை கவர்ந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4