உங்களுக்கு வாந்தி வந்தால் அல்லது வாந்தி வருவது போலிருந்தால் யாது செய்யலாம்?
#ஆரோக்கியம்
#வாந்தி
#அன்டனி
#தேவராஜ்
#அன்டனி தேவராஜ்
#Health
#Nausea
#Antoni
#Theva
#Antoni Thevaraj
Mugunthan Mugunthan
1 year ago
நம்மில் சிலருக்கு எங்கேயும் கொண்டாட்டங்களுக்குச் சென்று நன்கு சாப்பிட்டால், அல்லது பயணம் செய்தால் வாந்தி வரும். இது பெரும்பாலும் சமிபாடடு சரியாக நடைபெறாததாலும் எடுத்துக்கொண்ட உணவு சிலருக்கு ஒத்துப்போகாமல் தொற்றுக்கள் இருப்பின் வரும் ஒரு செயற்பாடு ஆகும்.
இன்று நாம் இந்த வாந்தி வராது எவ்வாறு தடுக்கலாம் என்பதையே இந்தப் பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
ஏலக்காய் தண்ணீர்:
- முதலில் இரண்டு ஏலக்காய் எடுத்து அதனை ஓரளவு தட்டி வைத்து கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் 200 ml தண்ணீர் ஊற்றி அதில் இடித்து வைத்த ஏலக்காயை சேர்த்து 2 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்.
- கொதித்த பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி அரை மணி நேரம் ஆறவைத்து குடிக்கவும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.
எலுமிச்சை:
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது, அரை டேபிள் ஸ்பூன் சீரக பொடி இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து 1 டம்ளர் நீரில் கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதித்தவுடன் அதை வடிகட்டி அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து குடித்து வந்தால் உடனடியாக வாந்தி நிற்கும்.
கிராம்பு:
- வாந்தி அல்லது குமட்டல் வருவது போல இருந்தால் கிராம்பு துண்டை வாயில் போட்டு சப்ப வேண்டும்.
- கிராம்பில் உள்ள வாசனை மற்றும் சுவை வாந்தியை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
துளசி சாறு:
- சிறிதளவு துளசிச்சாற்றில் சிறிது கற்கண்டை சேர்த்து சாப்பிட்டால் உடனடியாக வாந்தி வருவது நிறுத்தப்படும்.
- பயணத்தின் போது வாந்தி வருபவர்கள் புளிப்பு சுவையுள்ள திராட்சை அல்லது மிட்டாய் போன்றவற்றை சாப்பிடலாம்.
உப்பு – சர்க்கரை கலந்த நீர்:
- வாந்தி வருகிற மாதிரி இருந்தால் உப்பு மற்றும் சர்க்கரை கலந்த நீரை பருகினால் உடனடியாக வாந்தி நின்று விடும்.
சோம்பு நீர்:
- பெருஞ்சீரக விதைகளை மென்று சாப்பிட்டு வந்தால் உடனடியாக வாந்தி வருவதை தடுக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தியை தடுக்க சோம்பு விதைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
இஞ்சி:
- தேவையான அளவு இஞ்சியை எடுத்து அதனை தோல் உரித்து நசுக்கி 1 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து பருகினால் உடனடியாக வாந்தி நிற்கும்.
- தொடர்ந்து வாந்தி வந்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து காணப்படும். எனவே நீர் அதிகமாக பருக வேண்டும். தண்ணீர் வேண்டாம் என்று நினைப்பவர்கள் மோர் அல்லது இளநீர் குடிக்கலாம்.
- தொடர்ந்து வாந்தி வந்துகொண்டே இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.