கீரை சாறும் அதன் பயனும்
முருங்கை கீரையுடன் சிறிது கருப்பு எள், சீரகம், மிளகு, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்கவிட்டு வெந்தவுடன் இறக்கி வடிகட்டி அருந்திட, ரத்த அழுத்தம் சீராகும். ரத்த சோகை குணமாகும்.
பசலைக்கீரையுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, பச்சைமிளகாய். உப்பு சேர்த்து வேக வைத்து அருந்த, உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும், தைராய்டு நோய் குணமாகும்.
வல்லாரைக்கீரை, பயத்தம்பருப்பு, மிளகு, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு அருந்த ஞாபகசக்தி அதிகமாவதுடன் தோல் நோய்கள் குணமாகும்.
முடக்கத்தான் கீரை, சின்ன வெங்காயம், சுக்குப்பொடி சீரகத்தூள், உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்கவிட்டு, பின் வடிகட்டி அருந்த முதுகுத்தண்டுவலி வாதநோய், பக்கவாதம் முதலிய நோய்க்கு நிவாரணம் கிடைக்கும்.
முள்ளங்கிக் கீரையை அப்படியே வேக வைத்து சூப்பாகவோ, சாறாகவோ அருந்த சிறுநீரகக் கற்கள் கரையும். வாயுவை அகற்றி மலச்சிக்கலை போக்கும்.
சிறுகீரையோடு ஒரு பிடி பார்லி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகு ஒரு தேக்கரண்டி சேர்த்து நீர்விட்டு கொதித்ததும் உப்பு சேர்த்து இறக்கி வடிகட்டி வெண்ணெய் சேர்த்து அருந்த உடல் பருமன் குறையும் . பித்த நோய்கள் அகலும்.
பருப்புப் கீரையுடன் ஊற வைத்த வெந்தயம் போட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வேகவிட்டு வடிகட்டி சீரகத்தூள் மிளகுத்தூள், உப்பு சேர்த்து அருந்த பித்தம் தணியும். நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, எரிச்சல் குணமாகும்.
தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, வேப்பந்தளிர் சிறிது சேர்த்து நீர்விட்டு கொதித்ததும் வடிகட்டி அருந்தி வர, வயிற்றுப் பூச்சிகள் அழியும். ரத்தத்தை தூய்மையாக்கி, நெஞ்சகப் பிரச்னைகள், சுவாசக் கோளாறுகளைப் போக்கும்.
கொடிப் பசலைக் கீரையை வேகவிட்டு வடிகட்டி சிறிது கற்கண்டு சேர்த்து அருந்தி வர உடல் சூடு தணியும்.
துத்திக்கீரையுடன் கடுக்காயைத் தட்டி போட்டு, நீர்விட்டு உப்பு போட்டு கொதித்ததும் அருந்த வெள்ளைப்படுதல் குணமாகும்.
மணத்தக்காளி கீரையை சாறாக அருந்த வயிற்றுப்புண்ணை ஆற்றும். உடல் எடை குறைவதோடு, தொப்பையைக் குறைக்கும்.
நச்சக் கொட்டை கீரை, மிளகு, சீரகம், உப்பு, பூண்டு, தக்காளி, வெங்காயம் போட்டு நீர்விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தி வர கழுத்துவலி குணமாகும். குடற்புண்கள் ஆறும்.