ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் பாடல் காட்சி இணையத்தில் கசிந்தது

#Cinema #TamilCinema
Mani
3 years ago
ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் பாடல் காட்சி இணையத்தில் கசிந்தது


அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்தின் பாடல் காட்சி இணையத்தில் கசிந்து படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. அவர் தற்போது நடித்து வரும் படம் ஜவான். இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சொகுசு படகில் நடிகை நயன்தாராவும், ஷாருக்கானும் டூயட் பாடுவது போன்ற அட்டகாசமான பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இந்த காட்சிதான் படத்திற்கு ஹைலைட் என்பதால் நடுக்கடலில் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் சிலர் வேறொரு படகிலிருந்து படக்குழுவினருக்கே தெரியாமல் இந்த காட்சியை வீடியோ எடுத்து இணையத்தில் லீக் செய்து விட்டனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

இது நடந்ததிலிருந்து, இந்த வீடியோவை இணையத்தில் இருந்து அகற்ற அட்லீ பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், இந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4