இன்றைய வேத வசனம் 16.04.2023: நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்

#Bible #spiritual #Lanka4 #today verses #Holy sprit
Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 16.04.2023: நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்

ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்" (எபி 10:5) "நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்" (#சங்கீதம் 139:14)

உங்கள் ஒவ்வொருவருடைய சரீரத்தையும் கர்த்தர் எவ்வளவு ஆச்சரியமாய் உருவாக்கியிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்தால் அவரைத் துதிக்காமல் இருக்க முடியாது.

263 எலும்புகள், 970 மைல் நீளமுள்ள இரத்த நரம்புகள், 600 தசை நார்கள், நாக்கில் ஆயிரக்கணக்கான சுரப்பிகள், 400 விதமான சுவைகளை அறியும் அதிசய சுவை சுரப்பிகள், 20000 நுண் முடிச்சிகளையுடைய ஓசை அறியும் செவிப்பறைகள், இரத்தத்தில் இலட்சக்கணக்கான ஜீவ அணுக்கள், உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல, நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட, இரத்தத்தை உறையவைக்க, பரம்பரை நுண் உணர்ச்சிகளை பாதுகாக்க , அமைந்திருக்கும் செல்கள் அளவிடப்பட முடியாதவை.

இவ்வளவு அதிகமாய் கர்த்தர் உங்களை ஏன் உண்டாக்கினார்? தமிழ் கவிஞன் இவ்விதமாய் சொல்லுகிறான், "படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க. 
ஆங்கில சன்மார்க்க நெறி சொல்லுகிறது.

'மனிதன் சிருஷ்டிக்கப்பட்டதே தேவனைத் துதிப்பதற்காகவே.
மனிதனைப் பற்றிய தேவனின் நித்திய நோக்கம், மனிதன் தேவனை மகிமைப்படுத்துவதும், தேவன் மனிதனில் மகிமைப்படுவதுமே!

தேவபிள்ளைகளே, தேவனைத் துதிக்கிறீர்களா? உங்கள் சரீரம் இயங்கும் ஒவ்வொரு இயக்கமும் தேவ கிருபையினாலேயே.

உங்கள் கண் இமைகள் ஒழுங்காக மூடி திறக்காவிட்டால், உங்கள் நிலைமை என்னவாகும்? ஆகவே காத்தரைத் துதியுங்கள்! துதித்துக் கொண்டேயிருங்கள்! ஆமென்!! அல்லேலூயா!!!
அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. (#சங்கீதம் 107:9)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!