தேசிய கலை இலக்கிய பேரவையின் புத்தக கண்காட்சியும், புத்தக விமர்சனமும்!

#Event #Jaffna #Tamil People #Lanka4
Kanimoli
1 year ago
தேசிய கலை இலக்கிய பேரவையின் புத்தக கண்காட்சியும், புத்தக விமர்சனமும்!

தேசிய கலை இலக்கிய பேரவையின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நூறு பூக்கள் மலரட்டும் எனும் தொனிப் பொருளில்   புத்தக கண்காட்சியும் புத்தக விமர்சனமும் தேவரையாளி இந்து மகளிர் கல்லூரியின் எழுத்தாளர் பத்திரிகை ஆசிரியர் , இலக்கியவாதி  இராஜ சிறிக்காந்தன் அரங்கில் கல்லூரி அதிபர் ச.செல்வானந்தம் தலமையில் நேற்று பிற்பகல் 4:00 மணிக்கு ஆரம்மானது.

முதல் நிகழ்வாக எழுத்தாளர் இராஜசிறிக்காந்தன் அவர்களது திருவுருவ படத்திற்க்கு அவரது மகள் மற்றும் பேத்தி ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி  செலுத்தியதுடன் அவருக்காக இரண்டு நிமிடம் அகவணக்கமும் செலுத்தப்பட்டு நிகழ்வில் தலைவர் தலமை உரை ஆற்றினார.

அதனை தொடர்ந்து கலாநிதி  சு.குணேஸ்வரன் அவர்களால்  பொறியியலாளர் சிவ ஆரூரன் எழுதிய ஊமை மேகம் எனும்

புத்தகம் தொடர்பில் தனது விமர்சன உரையை நிகழ்த்தினார்.

வெகுஜனன், இராவணா இணைந்து எழுதிய இலங்கையின் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் எனும் நூல் தொடர்பான விமர்சனத்தை யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணா நிகழ்த்தினார்.

எஸ்தரின் பெரு வெடிப்பு மலைகள் எனும் புத்தகம் தொடர்பாக ஆய்வாளரும் ஆசிரியருமான சி.ரமேஸ் விமர்சன உரை நிகழ்த்தினர்.

ந.மயூரரூபனின் எழுத்தில் இயங்கியல் தொடர்பான நூலின் ஆய்வுரையை  யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் தி.செல்வமனோகரனும், 

அழ.பகீரதன் தொகுத்த மறுமலர்ச்சி எனும் நூலின் விமர்சன உரையை ஆய்வாளர் சி.விமலன் நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து நாடகமும் இடம் பெறறதுஇதே வேளை காலை 10:00 மணியளவில் ஆரம்பமான புத்தக கண்காட்சி இரவு 7:30 மணிவரை இடம் பெற்றது.

இன்றைய நிகழ்வில் எழுத்தாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.