சங்கடங்களில் இருந்து விடுபட்டு , புதிய முயற்சிகளில் லாபம் அடையும் சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
சங்கடங்களில் இருந்து  விடுபட்டு , புதிய முயற்சிகளில் லாபம் அடையும் சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: செயலில் வெற்றி காண்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பரணி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
கார்த்திகை 1: எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும். இழுபறியாய் இருந்த ஒரு வேலை எளிதாக முடியும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
ரோகிணி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டிருந்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: முயற்சியில் கவனமுடன் செயல்படுங்கள். ஆதாயம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
திருவாதிரை: நீங்கள் ஈடுபடும் முயற்சி லாபம் தரும் என்றாலும், செயல்களில் அவசரம் வேண்டாம்.
புனர்பூசம் 1, 2, 3: தொழில் புரியும் இடத்தில் நிதானம் தேவை. பணப் பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் தேவை.

கடகம்
புனர்பூசம் 4: உங்களை சோர்வடையச் செய்யும் வகையில், சிலரின் செயல் இருக்கும். ஆனாலும் வெற்றி பெறுவீர்கள்.
பூசம்: பணியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவை இல்லாமல் பிறரது விஷயத்தில் தலையிட வேண்டாம்.
ஆயில்யம்: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். உங்களைச் சுற்றி இருப்பவர்களால் உங்கள் அமைதி கெடும்.

சிம்மம்
மகம்: சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள்.
பூரம்: பிரச்னைகளை சமாளித்து அதிலிருந்து வெளிவருவீர்கள். உறவினர் ஆதரவால் எண்ணம் நிறைவேறும்.
உத்திரம் 1: வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி காண்பீர்கள். புதிய முயற்சி லாபத்தை வழங்கும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: உங்கள் செயல்களில் இன்று வேகமும், விவேகமும் இருக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
அஸ்தம்: சோர்வு விலகி உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் காணாமல் போகும்.
சித்திரை 1, 2: உங்கள் செயல்களுக்கு பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அதிரடியாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4: நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாகவும் இருக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும்.
சுவாதி: எதிர்பார்த்தவற்றில் ஏமாற்றம் உண்டாகும். குடும்பத்தினரின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.
விசாகம் 1, 2, 3: உங்கள் முயற்சிகளில் சிரமம் காண்பீர்கள். நீண்ட இழுபறிக்குப்பின் ஒரு வேலை முடியும்

விருச்சிகம்
விசாகம் 4: பணியாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். முதலாளியின் கோபம் உங்கள் மீது திரும்பலாம்.
அனுஷம்: உங்களது செயலால் பிறருக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உண்டாகும். எச்சரிக்கை அவசியம்
கேட்டை: வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் காணமுடியாமல் போகும்.

தனுசு
மூலம் தடைபட்டிருந்த வருவாய் இன்று உங்கள் கைக்கு வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பூராடம்: முயற்சியின் வழியே நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் தனித்திறமை வெளிப்படும்.
உத்திராடம் 1: மற்றவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: புதிய முதலீடுகள் பற்றிய எண்ணம் மேலோங்கும் என்றாலும், இன்று அதைத் தவிர்ப்பது நல்லது.
திருவோணம்: மற்றவர் தரும் நெருக்கடியால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். வார்த்தைகளில் நிதானம் தேவை.
அவிட்டம் 1, 2: தொழிலில் லாபம் அதிகரிக்கும். யோசித்து செயல்பட்டால் நன்மை உண்டு.

கும்பம்
அவிட்டம் 3, 4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். இன்று திட்டமிட்டு செயல்பட்டாலும் சங்கடங்கள் தோன்றும்.
சதயம்: எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் போகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
பூரட்டாதி 1, 2, 3: உங்களது முயற்சியில் ஒன்று வெற்றியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம்
பூரட்டாதி 4: வெளியூர் பயணத்தில் சங்கடத்தை சந்திப்பீர்கள். செலவுகள் பல வழியிலும் உண்டாகும்.
உத்திரட்டாதி: எதிர்பாராத சங்கடத்திற்கு ஆளாவீர்கள். சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும்.
ரேவதி: குடும்பத்தினர் வற்புறுத்தலால் மனதில் சங்கடம் ஏற்படும். செயல்களில் பின்னடைவு உண்டாகும்.