எதிர்கால சிந்தனையுடன் செயற்பட்டு , எதிர்பாராத செலவுகள் வந்து சேரும் விருச்சிக ராசியினர் - இன்றைய ராசிபலன்

#ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
1 year ago
எதிர்கால சிந்தனையுடன் செயற்பட்டு , எதிர்பாராத செலவுகள் வந்து சேரும் விருச்சிக ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: நண்பர்கள் வழியே பிரச்னைகள் உருவாக வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை அவசியம்.
பரணி: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். எதிர்பாலினரிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நன்மையாகும்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த செயல் ஒன்று நிறைவேறும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: திடீர் செலவு ஏற்பட்டு உங்களைத் தடுமாற வைக்கும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
ரோகிணி: அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீங்கள் விரும்பிய வாய்ப்பை அடைவீர்கள்
மிருகசீரிடம் 1, 2: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
திருவாதிரை: புதிய நட்புகளால் ஆதாயம் அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
புனர்பூசம் 1, 2, 3: குலதெய்வ அருளால் செயலில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும்.

கடகம்
புனர்பூசம் 4: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத வருவாயால் பொருளாதார நிலை உயரும்.
பூசம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். மகிழ்ச்சி கூடும்.
ஆயில்யம்: வேலை தேடி வந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.

சிம்மம்
மகம்: அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிரிகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும்.
பூரம்: உடல் நிலையில் உண்டான பயம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.
உத்திரம் 1: முயற்சியில் நன்மை உண்டாகும். கடவுளின் அருளால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும்.
அஸ்தம்: எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர்கள். பொன் பொருள் விஷயங்களில் கவனம் தேவை.
சித்திரை 1, 2: முயற்சி இழுபறியாகும். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதால் சங்கடங்கள் உண்டாகும்.

துலாம்
சித்திரை 3, 4: செயலில் இருந்த தடைகள் விலகும். பெரியவர்களின் ஆதரவால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.
சுவாதி: நண்பர்கள் உதவியால் செயலில் வெற்றி காண்பீர்கள். அரசு வழியிலான முயற்சியில் கவனம் தேவை.
விசாகம் 1, 2, 3: எதிர்பாலினர் உதவியால் உங்கள் எண்ணம் நிறைவேறும். நட்பில் உண்டான விரிசல் சீராகும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். எதிர்காலத்திற்குரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அனுஷம்: நீங்கள் நினைத்த ஒன்றை அடைவீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
கேட்டை: எதிரிகளின் தொல்லைக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். உங்கள் செயல்களில் வேகம் அதிகரிக்கும்.

தனுசு
மூலம்: செயலில் முழுமையான கவனம் தேவை. மீறினால் சில இழப்புகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
பூராடம்: பணியிடத்தில் சில பிரச்னைகள் தோன்றும். அங்கு அமைதி காப்பது நன்மையாகும்.
உத்திராடம் 1: எதிர்பார்த்தவற்றில் திருப்தியான நிலை ஏற்படாமல் போகும். கடவுள் சிந்தனை உங்களைப் பாதுகாக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: வேலைகளில் கவனம் தேவை. குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
திருவோணம்: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒன்றை அடைவதில் போராட்ட நிலையை சந்திப்பீர்கள்.
அவிட்டம் 1, 2: தாய்வழி உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். முயற்சி ஒன்றில் ஈடுபட்டு சங்கடத்தை அடைவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: முயற்சியில் வெற்றி காண்பீர்கள். இன்று புதிய நம்பிக்கையுடன் உங்கள் செயல்பாடு ஆரம்பமாகும்.
சதயம்: திட்டமிட்ட செயலில் மாற்றம் செய்வீர்கள். யோசித்து செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாகும். நீங்கள் நினைத்தவற்றை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பணியிடத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.
உத்திரட்டாதி: செலவுகள் குறித்து கவலை உண்டாகும். கையிருப்பு கரையும் என்பதால் கவனம் தேவை.
ரேவதி: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். எதிர்பார்த்தவற்றில் இன்று ஆதாயத்தைக் காண்பீர்கள்.