நயன்தாரா முதல் முறையாக கமல்ஹாசனுடன் ஜோடி சேருகிறாரா?

#Actress #Actor #TamilCinema
Mani
3 years ago
நயன்தாரா முதல் முறையாக கமல்ஹாசனுடன் ஜோடி சேருகிறாரா?

விக்ரமுக்கு பிறகு கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2  படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திட்டத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருந்தார். த்ரிஷா ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனால் கமல் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா ஏற்கனவே விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்தியிலும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நயன்தாரா இதுவரை கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை. இப்படத்தில்  கமல்ஹாசனுடன் முதல்முறையாக ஜோடி சேரும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் 2 இம்மாத இறுதியில் திரைக்கு வரவுள்ளது. அதன் பிறகு கமல்ஹாசன் படத்தின் வேலைகளை மணிரத்னம் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4