அதி உஷ்ணகாலநிலையால் உடற்சுடு காரணமாக வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு தர்ப்பைப் புல்.
தர்பை புல்லானது மிகவும் துாய்மையான இடங்களில் வளரும். இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடைய இந்தப்புல்லானது கிராமத்து வீடுகளில் வாசலில் கட்டி கொத்தாக தொங்கவிட்டிருப்பார்கள்.
இதன் மருத்துவ குணங்களையே இன்றைய பதிவில் நாம் காணவுள்ளோம்.
உடல் அரிப்பு நீங்க:
சிலருக்கு உடலானது எப்போதும் அரித்துக்கொண்டே இருக்கும். உடல் அரிப்பு இருப்பவர்கள் தர்ப்பைப்புல்லை எடுத்து நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக புல்லினை நறுக்கி நீர்விட்டு காய்ச்சி அதனை குடித்து வந்தால் உடல் அரிப்பு முற்றிலும் குறைந்துவிடும்.
சிறுநீரக கல் நீங்க:
குடலில் ஏற்படக்கூடிய புண்கள், அதிக காரம் சாப்பிடுவதால் வாய்களில் ஏற்படும் புண்களால் அவதிப்படுபவர்கள் தர்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் அந்தப் பிரச்சனைகள் நீங்கும். அதோடு, சிறுநீரகக் கற்களையும் வெளியேற்றிவிடும்.
பித்தம் குணமாக:
சிலருக்கு இளமையிலே தலை முடியானது நரைத்து போய் கூந்தலின் அழகையே கெடுத்துவிடும். இதற்கு காரணம் பித்தம் என்று சொல்வார்கள். பித்தம் இருப்பவர்கள் தர்ப்பைப் புல்லின் வேரை நிழலில் காய வைத்து பொடி செய்து கொள்ளவும். பித்தத்தை குறைக்க அந்த பொடியை பாலில் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் பித்தம் குறையும்.
தாய்ப்பால் சுரக்க:
பிறந்த குழந்தைக்கு உணவே தாய்ப்பால் தான். ஒரு சில தாய்மார்கள் குழந்தைக்கு பால் பத்தவில்லை என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரப்பதற்கு தர்ப்பைப்புல்லை நிழலில் காய வைத்து பொடி செய்து அதனை பாலில் கலந்து குடித்து வந்தால் குழந்தைகளுக்கு போதுமான அளவிற்கு தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.
உடல் சூடு குணமாக:
கோடை காலம் வந்துவிட்டாலே பலருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்று இந்த உடல் சூடு. உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள் தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட பாயில் படுத்து உறங்கினால் உடலில் இருக்கக்கூடிய சூடு தணிந்து உடல் குளிர்ச்சியாக இருக்கும். நிம்மதியான உறக்கம் கிடைத்து ஆரோக்கியம் நீடிக்கும்.
நீர்க்கடுப்பு குணமாக:
சிறுநீர் கழிக்கும் போது ஒரு சிலருக்கு எரிச்சல், நீர்க்கடுப்பு பிரச்சனையால் அவதிப்படுவார்கள். அந்த பிரச்சனையிலிருந்து விடுபட தர்ப்பைப் புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் 500 மில்லி லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சவும். தண்ணீர் 250 மில்லி லிட்டர் ஆனவுடன் அதனை வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல், நீர்க்கடுப்பு, உடல் வெப்பம் ஆகியவை நீங்கும்.