மனதில் பதட்டம் அதிகரித்து , உறவுகள் வழியிலும் சங்கடங்களை ஏற்படும் கன்னி ராசியினர் -இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
மனதில் பதட்டம் அதிகரித்து , உறவுகள் வழியிலும் சங்கடங்களை ஏற்படும் கன்னி ராசியினர் -இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: உங்கள் எண்ணம் இன்று எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பரணி: நீங்கள் திட்டமிட்டிருந்த வேலை முடிவிற்கு வரும். மனம் மகிழக்கூடிய அளவிற்கு ஒரு சம்பவம் நடைபெறும்.
கார்த்திகை 1: பழைய பிரச்சினை ஒன்றை சரி செய்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: செலவுகளில் கவனம் வேண்டும். தவறான நபர்களின் நட்பினால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்.
ரோகிணி: வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: வேலை பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவில் தாமதம் ஏற்படும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். புதிய நண்பர்கள் உதவியால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை: தொழிலில் லாபம் அதிகரிக்கும். தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும்.
புனர்பூசம் 1, 2, 3: வர வேண்டிய பணம் வந்து சேரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கடகம்
புனர்பூசம் 4: தொழிலை அபிவிருத்தி செய்வது குறித்து நண்பரிடம் பேசுவீர்கள். வேலை தேடி வந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.
பூசம்: உங்கள் முயற்சிகளில் ஒன்று வெற்றியாகும். இழுபறியாக இருந்தவற்றில் மாற்றம் உண்டாகும்.
ஆயில்யம் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வரவேண்டிய பணம் வீடு தேடி வரும்.

சிம்மம்
மகம்: திட்டமிட்டிருந்த செயல்கள் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்
பூரம்: பழைய பிரச்சினைகள் முடிவிற்கு வரும். அரசு வழியில் அனுகூலம் அதிகரிக்கும்.
உத்திரம் 1: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும் உங்கள் செல்வாக்கு உயரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். மனதில் பதட்டம் அதிகரிக்கும். உறவுகள் வழியிலும் சங்கடங்களை சந்திப்பீர்கள்.
அஸ்தம்: அலைச்சல் அதிகரித்து உடல் சோர்வடையும். எதிர்பார்த்த ஆதாயத்தில் தடை உண்டாகும்.
சித்திரை 1, 2: நீங்கள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறாமல் போகும். வம்பு வழக்குகளில் உங்கள் கவனத்தை செலுத்த வேண்டாம்.

துலாம்
சித்திரை 3, 4: செயலில் இருந்த தடைகள் விலகும். பெரியவர்களின் ஆதரவால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.
சுவாதி: நண்பர்கள் உதவியால் செயலில் வெற்றி காண்பீர்கள். அரசு வழியிலான முயற்சியில் கவனம் தேவை.
விசாகம் 1, 2, 3: எதிர்பாலினர் உதவியால் உங்கள் எண்ணம் நிறைவேறும். நட்பில் உண்டான விரிசல் சீராகும்.

விருச்சிகம்
விசாகம் 4: உங்களிடம் புதிய உற்சாகம் தோன்றும். விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.
அனுஷம்: மறைமுக எதிர்ப்புகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியை தள்ளி வைப்பீர்கள்.
கேட்டை: உங்கள் எண்ணம் நிறைவேறும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும்.

தனுசு
மூலம்: செயலில் முழுமையான கவனம் தேவை. மீறினால் சில இழப்புகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
பூராடம்: பணியிடத்தில் சில பிரச்னைகள் தோன்றும். அங்கு அமைதி காப்பது நன்மையாகும்.
உத்திராடம் 1: எதிர்பார்த்தவற்றில் திருப்தியான நிலை ஏற்படாமல் போகும். கடவுள் சிந்தனை உங்களைப் பாதுகாக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: வேலையில் இருப்போர் கவனமுடன் செயல்பட வேண்டும். நேர்மையான செயல்களில் நன்மை உண்டாகும்.
திருவோணம்: திட்டமிட்டிருந்த செயல் நிறைவேறாமல் போகும். உங்கள் முயற்சி ஒன்றில் குழப்ப நிலை உண்டாகும்.
அவிட்டம் 1, 2: புதிய முயற்சிகள் இழுபறியாகும் என்பதால் தள்ளி வைப்பது நன்மையாகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பார்கள்.
சதயம்: விரும்பியதை அடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.
பூரட்டாதி 1, 2, 3: குடும்பத்திற்காக ஒரு முயற்சியில் இறங்குவீர்கள். தொழிலில் இருந்த தடைகளை நீக்குவீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: வியாபாரத்தில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
உத்திரட்டாதி: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் என்றாலும் உங்கள் விருப்பம் நிறைவேற தாமதமாகும்.
ரேவதி: பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆலய தரிசனம் நன்மையளிக்கும்.