சாதாரணமாக ஆண்களில் ஏற்படும் ஆண்மைக்குறைவுக்கான அறிகுறிகள்.
ஆண்களின் உடலில் ஆண்மையை வெளிப்படுத்தும் ஓமோன் டெஸ்ரெஸ்திரோன் ஆகும். இதன் அளவு உடலில் போதியளவு இல்லாவிடின் ஆண்மைக்குறைவு ஏற்படும்.
இன்றைய பதிவில் ஒரு ஆணுக்கு டெஸ்ரெஸ்டிரோன் குறைந்து ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறிகளையே பார்க்கவுள்ளோம்.
ஆண்மை குறைவு அறிகுறிகள்:
1) உங்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைகிறது என்றால் பாலுணர்ச்சியானது குறைய ஆரம்பிக்கும். ஆகவே உடலில் பாலுணர்ச்சி குறைகிறது என்றால் அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் குறைவே முக்கிய காரணமாகும்.
2) ஒருவருடைய மன இறுக்கமும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதை தான் வெளிப்படுத்தும்.
குறைவான சக்தி ஆற்றல் ஆண்மை குறைவுக்குக்கான அறிகுறி என்று கருதப்படுகிறது ஒருவருடைய உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக இருந்தால், சக்தி குறைவாக இருக்கும்.
4) ஆண்மை குறைவின் மற்றொரு அறிகுறி என்றால் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாத நிலை ஏற்படும்.
5) பொதுவாக ஆண்களின் உடலில் போதுமான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் இல்லையென்றால் அவர்களது உடல் ஆற்றல் மற்றும் வலிமை மிகவும் குறைந்து காணப்படும். குறிப்பாக ஒரு சிறிய வேலையை கூட அவர்களினால் செய்து முடிக்க முடியாத அளவிற்கு உடல் மிகவும் வலிமை இழந்து காணப்படும்.
6) ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக இருந்தால் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய், தைராயிடு போன்ற பிரச்சனைகளில் ஏதேனும் ஏற்படக்கூடும்.
7) மற்ற நேரங்களுடன் ஒப்பிடுகையில், விந்து வெளிப்படுதல் குறைவாக இருந்தால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
முன்பை விட உறவில் ஈடுபடும் போது, விறைப்புத்தன்மையானது குறைவாக இருந்தால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
9) ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அவர்களின் விதைப்பையின் அளவானது சுருங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சிலருக்கு விதைப்பையை தொட்டால் எந்த ஒரு உணர்ச்சியும் தெரியாது.
10) அதிக உடல் உழைப்பு, அதிக உடற்பயிற்சி, அதிகப்படியான உடல் சூடு, சரியான நிலையில் வளராத விதைப்பை போன்ற முக்கிய காரணங்களினாலும் ஆண்மை குறைவு பிரச்சனை ஏற்படும்.