முகம் கழுவும் போது இதெல்லாம் பண்ணாதீங்க!
#Health
#Healthy
#Health Department
Mani
1 year ago
முகத்தை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்து கொள்ள அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். முகத்தை கழுவுவதன் மூலம் வறட்சியான சருமத்தை போக்க முடியும்.
ஆனால் முகத்தை கழுவும் போது நம்மை அறியாமல் செய்யும் தவறினால் முகப்பரு மற்றும் பல சரும பிரச்சனைகள் ஏற்படும்.
- முதலில் முகத்தை கழுவுவதற்கு முன் கைகளை நன்கு சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும்.
- இல்லாவிட்டால், கைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் நேரடியாக முகத்தில் பட்டு முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும்.
- முகத்தில் பருக்கள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் முகத்தை பலமுறை கழுவ வேண்டும்.
- இதனால் முகத்தில் எண்ணெய் பசை நீங்குவதோடு, அழுக்குகளும் முழுமையாக வெளியேற்றப்பட்டு சருமம் சுத்தமாக மாறும்.
- முகத்தை சிவப்பாக மாற்ற கிரீம்களை பயன்படுத்துவது நல்லது கிடையாது.
- அதற்கு மாற்றாக இயற்கை முறையில் தயாரித்த முகப்பூச்சுகளை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளலாம்.