வெப்ப காலத்தில் ஐஸ்கிரீமை அதிகம் எடுக்காதீர்கள்... நாளடைவில் தீங்கான நிலைமை ஏற்படும்.

#ஆரோக்கியம் #வெப்பமயமாதல் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Summer #Antoni #Theva #Antoni Thevaraj
வெப்ப காலத்தில் ஐஸ்கிரீமை அதிகம் எடுக்காதீர்கள்... நாளடைவில் தீங்கான நிலைமை ஏற்படும்.

வெயில் காலத்தில் நம்மில் பலர் குளிர்ச்சியான பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடுகிறோம். இதனால் உடற்சூடு தணிந்தாலும் அதிகம் அடிக்கடி சாப்பிட்டால் மிகவும் தீங்கான நிலைக்கு இட்டுச்சென்று விடும்.

இன்றைய பதிவில் அதிகம் ஐஸ்கிரீம் சாப்பிடுவதனால் உடலுக்கு ஏற்படும் தீமைகளையே பார்க்கவிருக்கிறோம்.

மூளைக்கு தீங்கு விளைவிக்கும்:

அளவுக்கு அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் அறிவாற்றல் திறன் மற்றும் நினைவாற்றல் சக்தி குறைந்து விடுகிறது என்று அறிவியல் ஆய்வில் கூறப்படுகிறது.

உடலில் சோம்பலை ஏற்படுத்துகிறது:

ஐஸ்கிரீமில் அதிக அளவில் கொழுப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் அது செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்கிறது. இதனால் உடல் சோம்பலாக மாறிவிடுகிறது. மேலும் இரவில் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தூக்கமின்மை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

தொப்பை அதிகரிக்கும்:

ஐஸ்கிரீமில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. எனவே ஐஸ்கிரீமை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் வயிற்று பகுதியில் கொழுப்பு அதிகரித்து தொப்பையை ஏற்படுத்தும்.

எடையை அதிகரிக்கும்:

ஐஸ்கிரீமில் சர்க்கரை, கலோரிகள் மற்றும் கொழுப்பு போன்றவை அதிக அளவில் உள்ளதால் இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதனை அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் கூடுதல், இதயநோய் போன்றவை ஏற்படுகிறது. 

உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்:

ஐஸ்கிரீமில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. இதனை நாம் உட்கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்:

ஐஸ்கிரீம் அதிகமாக சாப்பிட்டால் உடலின் உள்ள ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. எனேவ இது இதய ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்று ஆய்வில் கூறப்படுகிது.