வெப்ப காலங்களில் உடற் சூடு உள்ளவர்கள் அதனை தணிக்க யாது செய்ய வேண்டும்?
சிலருக்கு உடலானது சூடானதாகவும் சிலருக்கு குளிர்ச்சியானதாகவும் இருக்கும். இதிலே சூடான உடலைக்கொண்டவர்கள் கோடைக் காலங்களில் எப்படி தமது சூட்டை தணித்து வைத்திருக்கலாம் என்பதை இன்றைய பதிவில் காணவிருக்கிறோம்.
உடல் சூட்டை குறைப்பது எப்படி என்பதை பற்றி தெளிவாக படித்து தெரிந்துகொள்ளலாம்.
தலையில் சூடு குறைய:
தலை சூடு அதிகமாக இருப்பவர்கள் மட்டும் இதனை செய்ய வேண்டும் என்பது கட்டாயம் அல்ல பொதுவாக இதனை எல்லாரும் செய்லாம் இதனை செய்வதன் மூலம் அவர்களுக்கு தலை சூடு போன்ற வெப்பம் சலனம் காரணமாக வரும் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரும்.
டிப்ஸ்: 1
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை செய்யலாம். வாரந்தோறும் வாரத்தில் ஒரு நாள் தலையில் நல்லெண்ணெய் வைத்து சூடு போகும் அளவிற்கு தேய்க்க வேண்டும். தேய்த்து 10 அல்லது 15 நிமிடம் ஊற வைத்த நிலையில் தலையில் சீயக்காய் வைத்து நன்றாக தேய்த்து குளிக்கவும். இதனை செய்வதன் மூலம் தலை சூடு குறைந்து காணப்படும்.
இதனை வாரந்தோறும் ஆண்கள் வெள்ளிக்கிழமையும், பெண்கள் சனிக்கிழமையும் குளிர்ப்பார்கள். இதனை சம்பரதாயம் என்று சொல்வார்கள். நம் முன்னோர்கள் செய்யும் சம்பரதாயம் அனைத்தும் நமக்கு நன்மையையே தரும்.
ஊறவைத்த வெந்தயம் பயன்கள்:
டிப்ஸ்: 2
வெந்தயம் என்பது மருத்துவத்தில் உள்ள முக்கியமான பொருள். இதனை தினமும் இரவு சிறிதளவு ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும்.
வெந்தயம் கசப்பு தன்மை உடையது. அதனை ஊறவைத்து குடித்தால் கசப்பாக இருக்கும் அதனால் எப்போது தண்ணீர் குடிப்பீர்களோ அப்போது வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள் இந்த மாதிரியும் செய்யலாம். இதனை செய்வதன் மூலம் வெப்பத்தை குறைக்கலாம்.
அப்படி இல்லையெனில் கால் கப் வெந்தயத்தை இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை மை போல அரைத்து தலையில் தேய்த்து குளிர்த்து வர உடல் வெப்பத்தையும், முடி வளர்வையும், கருமையாகவும் இருக்க உதவும்.
கரிசலாங்கண்ணி பயன்கள்:
வெப்பம் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது முதலில் ஞாபகம் வருவது கீரை ராணி கரிசலாங்கண்ணி தான். இதில் எராளமான நன்மைகள் இருக்கிறது அதில் மிகவும் முக்கியமானது உடல் சூடு குறைப்பது தான். இதனை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
டிப்ஸ்: 3
கரிசலாங்கண்ணிக்கு வேறு பெயர் உள்ளது வெண்கரிசாலை, கையாந்தகரை, கைகேசி, கரிக்கை, கரியசாலை, பிருங்கராஜம், தேகராஜம் மற்றும் பொற்றலைக்கையான் என்ற பல பெயர்கள் இருக்கிறது. கரிசலாங்கண்ணி இலையை பறித்து அதனை சுத்தம் செய்து அரைத்து வாரத்தில் ஒரு நாள் தலையில் தேய்த்து குளித்து வர உடலில் உள்ள சூடு குறையும்.
அது மட்டும் இல்லை இதில் எராளமான நன்மைகள் இருக்கிறது அதில் ஒன்று முடி வளர, கருமையாக, அடர்த்தியாக இருக்கவும் இது பெரிதும் உதவுகிறது.
இதன் போல் செய்து பாருங்கள் முக்கியமாக அதிகம் தண்ணீர் குடிங்கள். தண்ணீர் சத்துக்கள் இல்லை என்றால் தலை சூடு அதிகமாக இருக்கும்.