பட்ட துன்பங்களில் இருந்து விலகும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

#ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
பட்ட துன்பங்களில் இருந்து விலகும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி : உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புணர்வும் நிதானமும் அவசியம்.
பரணி : அந்நியர்கள் வழியே நன்மை காண்பீர்கள். பிறருடன் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
கார்த்திகை 1 : நினைத்த ஒன்றில் நன்மை உண்டாகும். தொழிலில் வரவு அதிகரிக்கும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : மனதில் குழப்பம் வந்து செல்லும். உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
ரோகிணி : மனம் விரும்பியபடி செயல்படுவீர்கள். விஐபிகள் மத்தியில் மதிப்பு உயரும்.
மிருகசீரிடம் 1, 2 : உங்கள் தனித்தன்மை வெளிப்படும். முயற்சி பலிக்கும். பொருள் வரவு உண்டாகும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : செலவுகள் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
திருவாதிரை : வாகனத்தை இயக்குவதில் கவனம் தேவைப்படும் நாள். புதிய நண்பர் அறிமுகமாவர்.
புனர்பூசம் 1, 2, 3 : உறவினர்கள் உதவியுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

கடகம்
புனர்பூசம் 4 : செயல்களில் லாபத்தை காண்பீர்கள். எதிர்பாராத வரவு உண்டு. ஒரு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
பூசம் : நேற்றுவரை இழுபறியாக இருந்த வேலைகள் இன்று முடிவிற்கு வரும் நாள்.
ஆயில்யம் : தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சிம்மம்
மகம் : எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும்.
பூரம் : வேலையில் இருந்த இழுபறி விலகும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு அதில் வெற்றி காண்பீர்கள்.
உத்திரம் 1: தொழிலை விரிவு செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு உறவினர்கள் உதவியாக இருப்பர்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : பொருளாதார நெருக்கடி விலகும். மனம் தெளிவாகும். செயல்களில் வெற்றி காண்பீர்கள்.
அஸ்தம் : விஐபிகளின் ஆதரவால் நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் சிரமம் நீங்கும்.
சித்திரை 1, 2: முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். விலகிச் சென்றவர்கள் திரும்ப வருவார்கள்.

துலாம்
சித்திரை 3, 4: உங்கள் முயற்சிகள் இழுபறியாகும் என்பதால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
சுவாதி : நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னைகள் உங்களைத் தேடி வரும். நிதானம் அவசியம்
விசாகம் 1, 2, 3: தேவையற்ற சங்கடங்களை அனுபவிக்க நேரும். வம்பு வழக்குகளுக்கு உட்படாதீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4 : நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
அனுஷம் : விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவர். திட்டமிட்டிருந்த ஒரு செயல் வெற்றி பெறும்.
கேட்டை : சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

தனுசு
மூலம் : எதிரிகளின் செயல்களை முறியடிப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். லாபம் அதிகரிக்கும்.
பூராடம் : மறைமுகமாக தொல்லைக் கொடுத்தவர்களை அடையாளம் காண்டு கொள்வீர்கள்.
உத்திராடம் 1 : விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : நீங்கள் எதிர்பார்த்த ஒன்று கடைசி நேரத்தில் உங்களை விட்டு கை நழுவிச் செல்லும்.
திருவோணம் : உங்கள் முயற்சியில் தடைகளும் தாமதமும் உண்டாகும். எதிர்பார்த்தவற்றில் இழுபறி ஏற்படும்.
அவிட்டம் 1, 2: எச்சரிக்கையுடன் செயல்படுவதால் முயற்சி பலிக்கும். பண பரிவர்த்தனை இன்று வேண்டாம்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.
சதயம் : நீங்கள் எதிர்பார்த்த ஒன்று ஏமாற்றம் தரும். வேலை பளுவின் காரணமாக சோர்வு அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: முயற்சிகளில் நன்மையைக் காண முடியாமல் போகும். அமைதி காப்பது அவசியம்.

மீனம்
பூரட்டாதி 4 : முயற்சி நன்மை தரும். பயணத்தால் லாபமும் உறவுகளால் ஆதாயமும் அடைவீர்கள்.
உத்திரட்டாதி : எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரேவதி : உங்கள் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.