மனித வர்க்கத்தின் மிக உன்னதமான படைப்பு புத்தகம்
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்.
புத்தகங்கள் காலத்தின் விதை நெல் என்றார் பாவேந்தர் பாரதி தாசன். தூக்கு மேடைக்கு ஏறும் தறுவாயிலும் புத்தகம் வாசித்தார் பகத்சிங். இப்படி புத்தகத்தை உலகெங்கும் உள்ள அறிவாளிகள் காலங்காலமாகக் கொண்டாடி வருகின்றனர்
யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாள், 1995-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களையும், ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.
உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை உலகப் புத்தகம் தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மற்றொரு கவனிக்க தகுந்த விஷயமாக உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளாக அமைந்துள்ளது.
புத்தகங்களை விட சிறந்த நண்பன் வேறில்லை என்பதை புத்தக பிரியர்கள் மனமார ஒப்புக்கொள்வார்கள்.
ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்” என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம். புத்தகங்கள் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல்களை கொண்டாடும் நோக்கத்துடன் உலக புத்தக மற்றும் காப்புரிமை தினம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாம் அனைவரும் பிறந்த நாள் ,வேறு நாடகக்கலை கொண்டாடுவது போல் உலக புத்தக தினத்தை கொண்டாடும் வகையில் புத்தகங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து மகிழ்ச்சியடையலாம்
"பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி #லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்""
-சிந்து-