அடங்க மறுக்கும் போதைப்பொருள் பாவனை சமூகப்பொறுப்பு இல்லாமல் காசுக்கு விலை போகும் சட்டத்தரணிகள்
போதையின் அழுங்குப்பிடியில் சிக்கித்தவிக்கும் இளைய சமுதாயம் தற்போது நம் நாட்டில் விற்பனை பொருளாகி வருகிறது.போதை பொருட்கள் விற்பனையால்,இளைய தலைமுறையினர், தங்கள் வாழ்க்கையை சீரழிப்பது மட்டுமில்லாமல் சமுதாயத்தையும் சீரழிவுக்கு இட்டுச்செல்கிறார்கள் என கூறினால் மிகையாகாது.
இவ்வாறு இளைஞர்கள் சீரழிந்து போதைக்கு அடிமையாக முக்கிய காரணியாக அமைவது மேலைத்தேய கலாசாரம் எனும் போர்வையில் நடக்கும் குற்றங்களும்
தலைகுனிய வைக்கும் செயற்பாடுகளுமேயாகும்
இன்று நம் நாட்டில் மதுபான விளம்பரங்களின் அட்டகாசமும் அவற்றின் ஏமாற்றும் வியாபார தந்திரோபாயங்களும் தலைவிரித்தாடுவதைக் காண முடிகிறது.
இன்றைய தலைமுறைக்கு இயங்கி வரும் இரவு நேர கேளிக்கை விடுதிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வழங்கப்படும் பானங்களில் போதைப்பொருள்
கலந்து கொடுக்கப்படும் சட்டவிரோதமான அவர்களை அதற்குள் அடிமைப்படுத்தி செயற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டு தான் வருகிறது,
இளைய தலைமுறையினரின் வேகமாக கல்வி, வேலை வாய்ப்பின்மை ஆகியன மாற்றமடைந்து வருவதால் அவர்களிடையே போதை பொருளின் தேவையை அதிகரித்து தலைவிரித்தாடுகிறது
வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் மத்தியில் தான் இவ்வாறான போதைப்பொருள் அட்டூழியங்கள் அதிகரித்துக்காணப்படுகிறது. சுற்றிப்பார்த்தால் அவர்கள் குடும்பத்தினரும் இந்த கீழ்த்தரமான செயற்பட்டுக்கு உடந்தையா? என்ற கேள்வி எழுகிறது
போதைப்பொருள் அடிமையால் சிறுமியை பாலியல் கொடுமை,தந்தை மகளை பாலியல் வல்லுறவு, போதைப்பொருள் வாங்க தாயைகொலை செய்த மகன் இவ்வாறான செய்திகளும் எம் சமூகத்தில் தான் நடந்திருக்கிறது என்பது நிச்சயமாக நாம் இவ்வாறான சமூகத்தில் தான் வாழ்கிறோம்
என் அருவருக்க வைக்கிறது மக்களுக்கும் தாய்க்கும் வித்தியாசம் தெரியாமல் ஆக்குகிறது இந்த போதைப்பொருள்.
சுயதொழில் வேலை கல்வி என்று இல்லாமல் குடும்பத்தை விரட்டி மிரட்டி பணம் வாங்கி சடடவிரோதமாக போதைப்பொருள் வாங்கி அடிமையாகின்றார்கள்
இதற்க்கு முக்கிய காரணம் குடும்பங்கள் தான் என் ஆணித்தரமாக கூறலாம்
அதைவிட மிக முக்கியமான ஓன்று இவ்வாறான செயற்படுகளில் பொலீசாரிடம் சிக்கினாலும் அவர்கள் அவ்வளவாக அவர்களை கைது செய்வதில் ஈடுபாடு காட்டுவதில்லை
ஒரு சில அதிகாரிகள் கண்டித்தாலும் அவர்களை சிறைக்கு அனுப்பி தண்டனை வாங்கி கொடுக்க எண்ணினாலும் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தினாலும்
சில பணத்திற்கு பிச்சையெடுக்கும் சடடத்தரணிகள் மூலமாக அந்த கொடூரர்கள் வெளியில் வருகிறார்கள் வந்து மீண்டும் அந்த இழிவான செயலைத்தான்த்தான் செய்கிறார்கள்
இதற்க்கு வலி வகுப்பது நிச்சயமாக குடும்பத்தரவர்களும் பெற்றோர்களும் தான் பணத்தை வாரிஇறைத்து அவர்களை சடடத்தரணி மூலம் வெளியில் கொண்டு
வருகிறார்கள் தப்பு செய்த பிள்ளை சமூகத்தில் பொறுப்பு உள்ளவனாக மாற வேண்டும் திருந்த வேண்டும் சில நாட்கள் தண்டனையை அனுபவித்தாள் அவனுக்கு
ஒரு படிப்பினை என்று எண்ணாமல் வெளியிலே சில சட்டத்தரணிகள் மூலம் கொண்டு வருகிறார்கள் ,
அவர்களும் பணம் வந்தால் போதும் என எண்ணி சமூகப்பொறுப்பு இல்லாமல் வெளியிலே கொண்டு வந்து விடுகிறார்கள்
சில சிறந்த காசுக்கு விலை போகாத சட்டத்தரணிகள் கூட இருக்கிறார்கள் அவர்கள் இப்படிப்படடவர்களுக்காக நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்பதே வேண்டுகோள்.
பெரும் புள்ளிகளின் சாவகாசம் என்ன செய்தாலும் அவர்கள் மூலம் வெளியிலே வந்து விட முடியும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு உள்ளது.
இதனை நாம் சாதாரண விடயமாகப் பார்க்க முடியாது போதைப் பொருள் பாவனை இன்று வெளிப்படையாகவே இடம்பெற்றுவருவதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது
போதைப் பொருள் பாவனை காரணமாக சமூகம் பேரழிவைச் சந்திக்கும் நிலையே காணப்படுகிறது.
பாடசாலைகளுக்கு அண்மித்த இடங்களில் மறைமுகமான விதத்தில் மாணவர்களுக்கு போதை வஸ்து விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் பிரசித்தி பெற்ற பாடசாலைகளுக்கு அருகில் போதை மாத்திரை விற்கப்படுவது
கண்டு பிடிக்கப்பட்ட போதும் சம்மந்தப்பட்டவர்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிக் கொண்டனர்.
இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது காசுக்கு பலிக்கடாவாகும் சடடத்தரணிகளின் கீழ்த்தரமான பேழைகளால் இவர்கள் தப்பிக்கிறார்கள்
இதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கக்கூடாது .ஆக்கப்பூர்வமான ஆரோக்கியமான தலைமுறையை நாம் தான் நம் சமூகம் தான் கட்டியெழுப்ப வேண்டும்
போதைப்பொரு சீரழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எதிர்கால பேரழிவுக்கு இப்போதே அணைகடட வேண்டும்,
நிச்சயமாக எங்களால் மட்டுமே
இந்த வேலையை செய்ய முடியும் தனிமனிதன் ஒவ்வொருவரினதும் முயற்சி நிச்சயம் சமூகத்தை சீர்ப்படுத்த முடியும்
பணத்துக்காக கைக்கூலியாக மாறி தப்பிவிடும் சட்டத்தரணிகள் அதிகாரிகளிடம் செல்ல விடாமல் தகுந்த தண்டனை வழங்கி போதை இல்லாத சமூகமாகவும்
ஆக்கபூர்வமான சமூகமாகவும் மாற்றி இளம் சமுதாயத்துக்கு படிப்பினை சிறப்பான இளைஞர் சமூகமாக மாற்ற அனைவரும் முனைய வேண்டும்
-சிந்து-