உடலில் காயம், கொப்பளம் ஏற்பட்டால் வேப்பிலை அதற்கு அருமையான ஒரு மருந்து!

#ஆரோக்கியம் #மூலிகை #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #herbs #Antoni #Theva #Antoni Thevaraj
உடலில் காயம், கொப்பளம் ஏற்பட்டால் வேப்பிலை அதற்கு அருமையான ஒரு மருந்து!

கிராமப்புறங்களில் வேப்ப மரம் மிக எளிதாக காணக்கூடிய ஒரு மரமாகும். பலர் இதனை தமது வீட்டு வாசலில் நட்டிருப்பர். வேப்பமரத்தின் இலை, பூ, விதை, மரம் போன்ற எல்லாமே நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இப்படி சிறப்பு வாய்ந்த வேப்பிலை நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக  இருக்கிறது. அதனை இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சமிபாட்டு பிரச்சனைக்கு தீர்வு:

சில நபருக்கு எது சாப்பிட்டாலும் சமிபாடாகாது. இப்படி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வேப்பிலை சாற்றை குடித்து வந்தால் சமிபாட்டு பிரச்சனையை சரி செய்து விடும். வேப்பிலையில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் வாயு பிரச்சனை வராமல் தடுக்கிறது. இதனால் வயிறு வீக்கம், மலசிக்கல்,  இழையங்கள், வாய்ப்புண்போன்ற பிரச்சனையையும் சரி செய்கிறது.

காயம் ஆற மருந்து:

அரைத்த வேப்பிலையை காயம் ஏற்பட்ட இடங்களில் தடவி வர அந்த காயங்கள் ஆறிவிடும்.

இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி: 

வேப்பிலையில் இயல்பாகவே நச்சு கிருமிகளை நீக்கும் சக்தி இருக்கிறது. அதனால் வேப்பிலை சாற்றை தினமும் குடித்து வந்தால் நம் உடலில் இருக்கும் நச்சு கிருமிகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

சர்க்கரை அளவை குறைக்க:

வேப்பிலை சாற்றின் கசப்பான தன்மை சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். அதனால் வேப்பிலை சாற்றை குடித்து வந்தால் சர்க்கரையின் அளவை குறைக்க செய்யலாம்.

பருக்கள் நீங்க:

வேப்பிலை சாறு சரும பிரச்சனையிலுருந்து போராட உதவுகிறது. பருக்கள், கொப்பளங்கள் போன்றவற்றை நீக்கி சருமத்தை அழகாக வைத்திருக்கும். முக்கியமாக அம்மை நோய் வந்தவர்களுக்கு வேப்பிலையையே சாத்தி குணமடைய வைப்பார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க 

நம் உடலில் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றிலுருந்து எதிர்த்து போராட வேப்பிலை சாறு உதவுகிறது. இதனால் காய்ச்சல், சளி, வாய் புண் போன்றவை வராமல் நம்மை பாதுகாக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!