ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்னல் தாக்கி பெண் பலி!

#Breakingnews #ImportantNews #Tamilnews
Mani
3 years ago
ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்னல் தாக்கி பெண் பலி!

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்னல் தாக்கி ஒரு பெண் உயிரிழப்பு. , 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் , சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக மழை என்பது பெய்து வருகிறது.

இந்நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மல்லிகை கிருஷ்ணன் கோவில் வன்னியம்பட்டி பிள்ளையார் நத்தம், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

இதில் விவசாய பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்த சண்முக சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்தாய் (வயது 50 )அவரது மகள் சங்கீதா (வயது 23 ) உறவினர்கள் சமுத்திரக்கனி( வயது 15 )கிருஷ்ணவேணி (19 )முத்துமாரி (37 )ஆகியோரையும் மின்னல் தாக்கியது. இதில் பொன்னுத்தாயும் அவரது மகன் சங்கீதாவும் படுகாயம் அடைந்தனர்.

இதே போல ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் போஸ் குமார் வயசு 35 இவர் மழை பெய்த போது தனது வீட்டு மாட்டு தொழுவத்தில் பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. போஸ் குமாரும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மின்னல் தாக்கியதில் மொத்தம் 6 பேர் காயமடைந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொன்னுத்தாய் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4