விமர்சனங்களுக்கு சமந்தா கொடுத்த பதிலடிகள்..

#Cinema #TamilCinema #Lanka4 #samantha
Prabha Praneetha
3 years ago
விமர்சனங்களுக்கு சமந்தா கொடுத்த  பதிலடிகள்..

எல்லா வகையான மோசமான வார்த்தைகளையும், விமர்சனங்களையும் கடந்து தான் வர வேண்டும். ஒரு சிலர் இதுபோன்ற விமர்சனங்களுக்கு கோபப்படுவார்கள் அல்லது எந்த ரியாக்சனும் கொடுக்காமல் கடந்து விடுவார்கள்.

 ஆனால் நடிகை சமந்தா அவருக்கு எதிரான விமர்சனங்களுக்கு ஆறு முறை நச்சென்று பதிலடி கொடுத்து வாய் அடைக்க வைத்திருக்கிறார்.

 நடிகை சமந்தா சமீபத்தில் மையோசைட்டிஸ் என்னும் தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் தன்னுடைய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். 

 அப்போது ஒருவர் சமந்தாவின் அழகு போய்விட்டதாக நக்கலாக கமெண்ட் செய்திருந்தார். அதற்கு சமந்தா என்னை போல் எந்த ஒரு நோயும் உங்களை தாக்காமல் இருக்கவும், உங்கள் அழகு மேலும் மெருகேறவும் நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று பதிலளித்திருந்தார்.

சமந்தா அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். ஒருமுறை அவர் வி வடிவ நெக்லைன் ஆடை அணிந்ததற்காக பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார். 

அதற்கு பதில் அளித்த சமந்தா இந்த காலத்திலும் ஒரு பெண் ஆடையால் மதிப்பிடப்படுவது என்பது ரொம்பவே கவலைக்குரிய விஷயம், ஒரு பெண்ணை ஹெம்லைன்கள் மற்றும் நெக்லைன்களின் அடிப்படையில் மதிப்பிடுவதை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதை பற்றி கவனம் செலுத்துங்கள் என்று சொல்லியிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4