மாணவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து திசைதிருப்ப தென்மராட்சி அபிவிருத்திக்கழகத்தினால் புது முயற்சி
அண்மைக் காலமாக பாடசாலை மாணவர்களிடையே வேகமாக பரவி வரும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாவதிலிருந்து மாணவர்களை திசைதிருப்பும் முகமாக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் தென்மராட்சி பிரதேசத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் தென்மராட்சி அபிவிருத்திக்கழகத்தினால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் 2023ம் ஆண்டிற்கான தென்மராட்சி கடினப் பந்து துடுப்பாட்ட போட்டிகளின் இறுதிப்போட்டி 29/04/2023 சனிக்கிழமையன்று பி.ப 1.00 மணிக்கு யாழ் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதயா மகா வித்தியாலயத்தில் தென்மராட்சி வலையக் கல்விப்பணிப்பாளர் திரு தம்பிராசா கிருபாகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
சர்வதேச தென்மராட்சி அபிவிருத்திக் கழகதால், அதன் அனுசரணையில் நடாத்தப்படும் இரண்டாவது விளையாட்டு நிகழ்வு இது என்பதும் இங்கு குறிப்பிட தக்கது. . இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர் திரு ஞானம் ஜோன் குயின்ரஸ் (மாகாண கல்விப் பணிப்பாளர் வடமாகாணம்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு நடராஜா சர்வேஸ்வரன் (அதிபர் யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரி) திருமதி லலிதாமலர் முகுந்தன் (அதிபர் யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி) திரு செல்லத்துரை பேரின்பநாதன் (அதிபர் யாழ் டிறிபேர்க் கல்லூரி) ஆகியோரும் விசேட விருந்தினர்களாக திரு வெற்றிவேலு அசோகன்(தென்மராட்சி அபிவிருத்தி ஐக்கிய ராச்சியம் ஐக்கிய இராச்சியம்) திரு மயில்வாகனம் சிறீதாசன் (விளையாட்டு இணைப்பாளார் தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் சர்வதேசம்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவர்களுடன் கெளரவ விருந்தினர்களாக திரு விசுவரத்தினம் சுதர்சன் (முகாமையாளர், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்) திரு வடிவேலு ஸ்ரீபிரகாஸ் (பொருளாளர், கைத்தொழில் வணிகர் மன்றம்) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். கடந்த சிலநாட்களாக சாவகச்சேரி இந்துக்கல்லூரி, மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, டிறிபேக் கல்லூரி ஆகிய பாடசாலை அணிகளுக்கிடையே கடினப்பந்து துடுப்பாட்ட போட்டிகள் நடைபெற்று 29/04/2023 சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு சாவகச்சேரி இந்துக்கல்லூரி டிறிபேக் கல்லூரி அணிகள் தெரிவாகியுள்ளன.
இப்போட்டியில் வெற்றியீட்டும் அணிக்கு இலங்கை ரூபா மதிப்பில் ரூபா 1,00,00.00 பரிசிலும் இரண்டாம இடத்தைப் பெறும் அணிக்கு ரூபா 75 ஆயிரம் பரிசிலும் மூன்றாம் இடத்தைப் பெறும் அணிக்கு ரூபா 50 ஆயிரம் பரிசிலும் வழங்கப்படவுள்ளது. அதே தென்மராட்சி அபிவிருத்திக்கழகத்தினால் நடத்தப்பட்ட சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான இறுதிப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் அன்யை தினம் நடைபெறவுள்ளது. இந்த விளயாட்டு நிகழ்வுகளை சிறப்புற நடத்துவதற்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், தென்மராட்சி வலையக்கல்வி அலுவலர்கள் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து விருந்தினர்களுக்கும் சர்வதேச தென்மராட்சி அபிவிருத்திக்கழகம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் நிகழ்வில் கலந்து சிறப்பித்த பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் தென்மராட்சி அபிவிருத்திக்கழகம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. எதிர்காலங்களிலும் இவ்வாறான சமூக நலன் சார் நிகழ்வுகளை சிறப்புற நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரினதும் பூரண ஒத்துழைப்பை சர்வதேச தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் வேண்டி நிற்கிறது.
நன்றி,
சர்வதேச தென்மராட்சி அபிவிருத்திக் கழகம்.