IPL Match38 - பஞ்சாப் அணியை வீழ்த்திய லக்னோ

#IPL #T20 #Sports News #Lucknow #Punjab
Prasu
3 years ago
IPL Match38 - பஞ்சாப் அணியை வீழ்த்திய லக்னோ

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. 

 அதன்படி, முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 பந்துகளில் 72 ரன்களும் விளாசினர். கைல் மேயர்ஸ் அரை சதமடித்து, 54 ரன்கள் சேர்த்தார். நிகோலஸ் பூரன், 19 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்களும், ஆயுஷ் பதோனி 43 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் சார்பில் ரபாடா 2 விக்கெட் எடுத்தார். 

இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கேப்டன் ஷிகர் தவான் ஒரு ரன்னில் அவுட்டானார். பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். 

சிக்கந்தர் ரசா 36 ரன்னும், லிவிங்ஸ்டோன் 23 ரன்னும், சாம் கர்ரன் 21 ரன்னும் எடுத்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அதர்வா டெய்ட் அதிரடியாக ஆடினார். 

அவர் 36 பந்தில் 2 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 66 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியில், பஞ்சாப் அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதன்மூலம் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி 5வது வெற்றியைப் பதிவு செய்தது. 

லக்னோ சார்பில் யாஷ் தாக்குர் 4 விக்கெட்டும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4