நீ இச்சமூகத்தின் மீது அக்கறை கொள்ளவேண்டிய நேரம் இது. உன் பரம்பரையை தொலைத்துவிடாதே.

Kanimoli
1 year ago
நீ இச்சமூகத்தின் மீது அக்கறை கொள்ளவேண்டிய நேரம் இது. உன் பரம்பரையை தொலைத்துவிடாதே.

நீ இச்சமூகத்தின் மீது அக்கறை கொள்ளவேண்டிய நேரம் இது. உன் பரம்பரையை தொலைத்துவிடாதே. நம் நாட்டில் போதைப்பொருள் கலாசாரம் தலைதூக்கி ஆடுகிறது அதற்கு காரணம் போதைவஸ்துக்கள் இலகுவாக இளைஞர்கள் மத்தியில் கிடைப்பதேயாகும் உண்மையில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் உடலை மரக்கட்டையை கரையான் அரிப்பது போல் இந்த போதையும் அவர்களை அரித்த வண்ணமே உள்ளன என்பது தான் நிதர்சனம் இன்றைய சூழலில் போதைப்பொருள் புகைத்தல் பாவித்தால் கெத்து என்ற ஒரு நிலை இளைஞர்கள் மத்தியில் பரவலாகவே காணப்படுகிறது.

 யாழ்ப்பாணத்தில் போர்க்களத்தின் பிற்பாடு இளைஞர்கள் ,யுவதிகள் அவர்களின் வாழ்க்கையை போதைவஸ்த்தினால் தொலைத்தனர் தொலைக்கப்பட்டனர் தொலைக்க வைத்தனர் தொலைப்பதற்கு தூண்டப்பட்டனர் இந்த போதை வஸ்த்தால் பாதிக்கப்பட்டவர்கள் கொலை களவு கொள்ளை அடிதடி சண்டை குடும்பப்பிரிவு தற்கொலை விபத்து என நீண்டுகொண்டே செய்கிறது யாழ்ப்பாணத்தில் நாங்கள் பார்க்க கூடிய விடயங்கள் அறியக்கூடிய விடயங்கள் சில ஊடகங்களில் மிகைப்படுத்தி தங்கள் ஊடக வியாபாரத்திற்க்காக செய்திகளை பிரசுரித்து இருந்தாலும் அங்கே சில உண்மையும் இருக்க தான் செய்கின்றது நிச்சயமாக அது உண்மைகளால இருக்கலாம் இருந்தாலும் அது ஒரு கசப்பான வருங்கால சந்ததிகளின் வாழ்வை முளையிலே திட்டமிட்டு கருக்குகின்ற உண்மைகளாக காணப்படுகின்றன.

 இன்று நாங்கள் எங்கள் ஊடகத்திலேயே இதனை குறிப்பிடக்கூடாது வளர விடக்கூடாது இதனை தூண்டக்கூடாது என தடுத்து வைத்திருந்தோம் இப்போது இதை ஊடகங்களில் கூற வேண்டிய கட்டாய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் இந்நிலையிலேயே பல நாடுகளில் சிறுமிகளும் சரி சிறுவர்களும் சரி ஆண்களாலும் பெண்களாலும் துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறாரார்கள் .சிறுவனாகவோ சிறுமியாக இருந்தாலும் அங்கே துஸ்பிரயோகம் ஆரம்பிக்கிற இடம் குடும்பமாகவே காணப்படுகிறது என்பது கவலைக்குரிய விடயமாகும் மற்றும் ஆதரவற்ற தாய் தந்தையர் வேலைக்கு செல்கின்ற வீட்டில் இருக்கும் சிறுவர்களை அயல் வீட்டார்களும் துஷ்பிரயோகம் செய்த சாட்சியங்கள் பல காணப்படுகின்றன வேலியே பயிரை மேய்வது போல இந்த சிறுவர்களை ஆச்சிரமத்தில் தங்கி படிக்கும் பொது அங்கே இருக்கும் தலைவர்கள் நடத்துனர்கள் அல்லது காவலர்கள் துஷ்பிரயோகப்படுத்துகிறார்கள்.

 பாடசாலைகளிலும் அதிக துஸ்பிரயோகம் நடைபெறுவதாக தற்போது ஊடகங்களில் செய்திகள் உலாவுகின்றன நூற்றுக்கு ஐம்பது வீதம் மிகைப்படுத்தி எழுதினாலும் அதிலும் உண்மைகள் இருக்கத்தான் செய்கிறது துஸ்பிரயோகங்களை பாடசாலைகளில் பொது இடங்களில் நடைபெறுவதை தடுக்க பெற்றோர்கள் நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் முன்வர வேண்டும் அன்றைய காலத்தில் இல்லையா என ஆராய்ந்து பார்க்கும் பொழுது நிச்சயமாக இருந்திருக்கிறது.

 ஆனால் இந்த டிஜிட்டல் வளர்ச்சியில் அதிகமாக காட்டப்படுகிறது என்பதே உண்மை டிஜிட்டல் பரவலின் ஆதிக்கம் சில விடயங்கள் தீமையை ஏற்படுத்தி இருந்தாலும் இவ்வாறான இப்படியான விடயங்களை வெளிக்கொணர்வதற்கு lanka 4 ஊடகத்தால் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் மற்றும் தற்கால சிறுவர்கள் சற்று புத்தி கூர்மையாக இருக்கும் காரணத்தால் சிறு தவறுகள் ஏற்படும் நிலைப்பாடு இருந்தாலோ நடந்தாலோ பெற்றோர்களுக்கோ நண்பர்களுக்கோ நலன் விரும்பிகளுக்கோ கூறிவிடுகிறார்கள் இதனால் இது உடனடியாக வெளியே வருகிறது நிச்சயமாக இவ்வாறான செயற்படுகளை வளர விடாமல் அடியோடு அழித்து ஓடுகின்ற ஆற்றில் வீச வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள் இருக்கிறன . வருங்கால இளைஞர்கள் சிறப்பான ஒளிமயமான எதிர்காலத்தை காணவேண்டியவராக உள்ளனர் கல்வியே ஆயுதம் சொல்லு நீ தினம் எனும் lanka 4 இன் வாசகத்திற்கு இணங்க கட்டாயம் நாம் பாடுபடுவோம் தயவு செய்து எமது வாசகர்களே நீங்களும் இதற்கு உறுதுணையாக உங்கள் ஒரு கரத்தை கொடுக்காமல் விட்டாலும் ஒரு விரலையாவது கொடுத்து எம்மோடு இணைத்து ஆதரவு தருமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்

-சிந்து-

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!