அதிதி சங்கருக்கு அடுத்தடுத்து குவியும் வாய்ப்புகளால் வயித்தெரிச்சலில் நடிகைகள்
சங்கரின் மகளான அதிதி டாக்டர் படிப்பு படித்திருந்த போதிலும் நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக நடிகையாக மாறி இருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக விருமன் திரைப்படத்தில் அறிமுகமான அவர் இப்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
பத்து வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருந்தாலும் இவர் இன்னும் வளர்ந்து வரும் ஒரு நடிகராகவே இருக்கிறார். அதனாலேயே இப்போது அவர் தனக்கு மிகப்பெரும் வெற்றியை தேடி கொடுத்த ராட்சசன் பட இயக்குனருடன் மீண்டும் இணைந்து இருக்கிறார். அந்த படத்தில் தான் அதிதி சங்கர் ஹீரோயினாக கமிட் ஆகி இருக்கிறார்.
டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அதிதி எப்படி விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்தார் என்ற கேள்வி பலருக்கும் தோன்றலாம். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் ஒரே மேனேஜர் தான். அவரின் முயற்சியாலேயே இந்த கூட்டணி உறுதியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் மற்றொரு திரைப்படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார்.
அதாவது நடிகர் முரளியின் இரண்டாவது மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் நடிக்கும் படத்தில் தான் அதிதி ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.
விஷ்ணுவர்தன் இயக்கும் இந்த படம் பிரான்சில் படமாக்கப்பட இருக்கிறது. அதிலும் இரண்டு மாத காலம் அங்கேயே சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். அதற்காக படக்குழுவினர் விரைவில் அங்கு செல்வதற்கும் வேலைகள் நடந்து வருகிறது. இப்படி அதிதியை தேடி அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருப்பது மற்ற நடிகைகளின் வயிற்றில் புகையை கிளப்பி இருக்கிறது.