உல்லாசபிரயாணிகளுக்கு தகுந்த பாதுகாப்பும், கண்காணிப்பும் தேவை. இல்லையேல் மாபெரும் அனர்த்தம் ஏற்படும் அபாயம்!

#SriLanka
Kanimoli
11 months ago
உல்லாசபிரயாணிகளுக்கு தகுந்த பாதுகாப்பும், கண்காணிப்பும் தேவை. இல்லையேல் மாபெரும் அனர்த்தம் ஏற்படும் அபாயம்!

போரின் பிற்பாடு இலங்கை யாருமே நினைக்காத அளவுக்கு கீழ் மட்டத்திற்கு சென்றது. அதன் பின்னர் கொரோனாவின் தாக்கத்தால் உலகளாவிய ரீதியிலேயே பொருளாதார நெருக்கடி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தடைப்பட்டு ஒவ்வொரு நாடுகளும் வறுமைக்கு உள்ளாக்கப்பட்டன. வீழ்ந்தவன் மீது மாடு ஏறி மிதித்தது போல உக்ரைன் ரஷ்யன் போர் ஊடாக பல நாடுகளும் தாக்கமடைந்திருந்தன. பொருட்களை எடுப்பதற்கு வாங்குவதற்கு அதாவது கனிமங்கள், பெட்ரோல்கள், இரும்புகள் ,எரிவாயுக்கள் போன்ற பொருட்களை ஐரோப்பிய நாடுகள் மட்டுமில்லாமல் ஆசிய நாடுகள் கூட ரஷ்யா மற்றும் உக்ரைனிடம் இருந்தும் பெற்றுக்கொண்டன.

 அந்த போர் சூழல் காரணமாக உலக நாடுகள் ரஷ்யாவை தடை செய்ததன் காரணமாகவும் இதனால் பல நாடுகள் ஏற்றுமதி இறக்குமதியால் பாதிக்கப்பட்டன. அந்த வகையிலே இலங்கை கூட போர்ச்சூழலினால் பெற்ற கடனினால் பெற்ற கடன் சுமை கொரோனா சுமையால் சங்கடத்துக்கு உள்ளானது . ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு நிறுவனங்கள் மற்றும் ஆளுங்கட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தினால் ஆட்சி மாற்றப்பட்டது.

 ரணில் விக்ரமசிங்க வந்ததன் பிறப்பட்டு உலக நாடுகள் ஓரளவுக்கு நம்பிக்கையோடும் மற்றும் உலக நாணய நிதியம் ஒரு நம்பிக்கையோடும் இலங்கையை தூக்கி நிறுத்தவும் வறுமையில் இருந்து காப்பாற்றவும் கைகொடுத்து சற்று இளைப்பாறும் அளவுக்கு ஓரளவு நாடு ஓடிக்கொண்டு இருக்கிறது. வளர்ச்சி அடைந்து வருகிறதா? இல்லையா? கடன் அதிகமா பெற்றுள்ளதா? இல்லையா? என்பதை தாண்டி இலங்கையிலே பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த இலங்கையில் இப்பொழுது மாத்திரமல்ல எப்பொழுதும் உல்லாச பிரயாணத்தால் இலங்கை பெரும் தொகையான வெளிநாட்டு வருவாயை பெற்ற வரலாறு நாங்கள் பின்னோக்கி பார்த்தால் புரியும். 

 இந்த வகையிலே போரற்ற சூழ்நிலையின் பிற்பாடு இரவு பகலாக முழு நாட்டையும் சுற்றிப்பார்க்கும் சூழலில் இலங்கை இருப்பதன் காரணத்தால் ஆசிய நாடுகள் ஐரோப்பிய நாடுகள்,அமெரிக்க நாடுகள், மற்றும் அரேபிய நாடுகள் உல்லாச பிரயாணிகள் கப்பல் கப்பல்களாக ஆயிரக்கணக்கான உல்லாசப்பிரயாணிகள் பெருக்கெடுத்து வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாம் பார்க்கும் பொழுது இலங்கைக்கு உல்லாச பயணத்துறையால் பெரிய ஒரு வருமானத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது மேலும் ஏற்படுத்த வாய்ப்பும் இருக்கிறது.

 இந்த வாய்ப்புக்கள் ஊடக இலங்கை மேலும் உல்லாச பிரயாணிகளை உள்வாங்குவதற்களாக lanka4 ஊடகத்தின் ஊடாக சில ஆலோசனைகளை நாங்கள் இங்கே முன்வைக்க விரும்புகிறோம். lanka4 நிறுவனம் எப்பொழுதும் இலங்கை திருநாட்டிற்கும், உலகத்திற்கான அமைதியையும் போரற்ற சூழலையும் இளைஞர்களின் வருங்காலத்தையும் கல்வியின் மேம்பாட்டையும் வறியவர்களுக்கு உதவித்திட்டங்களையும் பொருளாதாரத்தை மேம்பாட்டை விருத்தி செய்ய எமது செய்திகள் ஊடக அறிவித்து வருகிறோம்.

 அந்த வகையிலே lanka4 ஊடகத்தினூடாக எங்களுடைய கருத்தை இங்கே பதிய விரும்புகிறோம் அதாவது உல்லாச பிரயாணிகள் அதிகமா வருவதால் அவர்கள் எதை விரும்புகிறார்களோ? அதாவது ஆடம்பர பொருட்கள்,உணவு பொருட்கள் மற்றும் வியாபாரப்பொருள்கள் அதாவது குறிப்பாக இரத்தினக்கல், தேயிலை, இறப்பர் போன்ற பொருட்கள் விற்பனையை அதிகம் செய்வதால் நாட்டிற்குள் செலவழிக்கும் பணத்தை தாண்டி விற்பனை செய்யும் பணத்தில் அதிக அந்நியச்செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும். 

 இதற்ககு எங்களது ஆலோசனையாக உல்லாச பிரயாணிகள் எங்க அதிகமாக செல்கிறார்கள் எங்கே தங்கி வருகிறார்கள் எங்கே அதிகம் உலவுகிறார்கள் என பார்த்து அங்கே விற்பனை நிலையங்களை அமைப்பது சிறந்ததொரு தீர்வாகும். அடுத்து உல்லாசப்பிரயாணிகளுக்கு சிறு இடையூறு அல்லது ஆபத்து நடந்தாலும் வெளியே அந்த செய்திகள் வரும் பொழுது அடுத்த கட்டத்துக்கு அந்த பிரயாணிகள் வருகையை மிக மிக குறைத்து விடும் இலங்கையில் ஆபத்து பாதுகாப்பு இல்லையென அந்த நாட்டு அரசாங்கம் அவர்களை செல்ல விடாமல் தடுத்து விடுவார்கள் இதனால் வருமானம் ஈட்டித்தரும் உல்லாசப்பிரயாணத்துறை முடங்கி விடும். 

 அதற்காக நாம் உல்லாசப்பிரயாணிகள் எங்க வருகிறார்கள் எங்கே தங்குகிறார்கள் என பார்த்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது எமது கடமையாகும். அடுத்து அனைவரும் அறிந்த விடயம் என்னவென்றால் ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு உளவுப்படைகள் இருக்கின்றன அந்த உளவுப்படைகளிலும் தொழில் புரிபவர்கள் அனைத்து நாடுகளுக்கும் சென்று வருகிறார்கள்,அனைத்து நாடுகளில் இருந்தும் உளவுப்படைகள் வந்து செல்கிறார்கள் என்ற தரவுகளும் கிடைத்திருக்கின்றன அந்த உளவுப்படைகள் எதற்காக வருகிறார்கள் என உற்றுநோக்கும் பொழுது அவர்கள் மற்றைய உளவுப்படைகள் இலங்கையில் எதை உளவு பாக்குறார்கள் என பார்ப்பதற்கும் அத்தோடு இலங்கை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருப்பதாலும் உலகளாவிய ரீதியில் சில நாடுகளில் இருந்து இயங்கும் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் ஓன்று கூடல்கள் சுற்றுலாப்பிரயாணிகள் போல் வருகை தந்து இலங்கையில் நடைபெறுவதனால் ஒரு அச்சமும் இலங்கையில் இருக்கிறது.

 அதை நாம் ஒரு வகையிலே ஆமோதிக்க தான் வேண்டும் காரணம் இலங்கையில் எந்த வித கெடுபிடியும் இல்லாமல் விசா பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதாலும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது இருந்தாலும் மீண்டும் குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் அச்சம் இருந்தால் இலங்கை சுற்றுலாத்துறையை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல முடியாமலே போகும். மற்றும் தற்காலத்திலே உல்லாசப்பிராயணத்துறையில் ஒரு நாட்டிற்கு ஒருவர் அந்த நாட்டை தெரிவு செய்து ஒரு துணை வியாபாரமாக வைத்துக்கொள்வார்கள்.

அதாவது ஒருவர் நாட்டை சுற்றுப்பார்ப்பது மட்டுமல்லாமல் இரத்தினக்கற்கள் ஏனைய பொருட்களை வேண்டி தாம் விற்பனை செய்யும் சூழலையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். சிலர் வெறும் உல்லாச பிரயாணிகளாக வந்து பார்த்து விட்டு இங்கே இருக்கும் பொருட்களை தங்கள் நாட்டில் விற்பனையாகும் என பார்த்தும் வாங்கி செல்கிறார்கள். அந்த வகையில் வரும் சுற்றுலா பிரயாணிகளை கவரும் வகையில் அவர்களை வியாபாரங்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் உதாரணத்துக்கு சில மாதிரிகளை இனாமாக கொடுப்போமாக இருந்தால் அதாவது பிரிட்டிஷ் காரர்களுக்கு இலவசமாக தேயிலை இனாமாக கொடுத்தது போல கைப்பணி பொருட்கள்,மூலிகைப்பொருட்கள் என்பனவற்றை நிறுவங்கள் இலவசமாக கொடுப்பதால் நிச்சயமாக விருப்பத்தன்மை ஏற்பட்டு அதை அவர்கள் வாங்கும் சூழலும் உருவாக்க வாய்ப்புள்ளது.

 இப்படி நாம் உல்லாச பிரயாணிகளை இலங்கையில் விளையும் வெளிநாட்டில் விரும்பும் பொருட்களை அவர்களுக்கு அறிமுகம் செய்வதால் அவர்கள் மேலும் மேலும் வருகையை அதிகரிப்பார்கள் இது இலங்கை அரசின் முக்கிய கடமையாக இருக்கிறது. சில நேரங்களில் சுற்றுலாப்பிரயாணிகளின் வருகையை ஆமோதித்து அவர்களை அச்சத்துக்குள்ளாக்கி குறி வைக்காமல் இருந்தாலே அவர்கள் அவர்களின் வருகையை அதிகரித்து அதிக அந்நியச்செலாவணியை அதிகரிக்க முடியும் என்பதே நிதர்சனம்

-சிந்து-