பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் மற்றும் அணி வீரர்களிடம் மன்னிப்பு கோரும் லியோனல் மெஸ்ஸி
அங்கீகரிக்கப்படாத பயணமாக சவுதி அரேபியா சென்றதற்காக பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) மற்றும் அவரது அணி வீரர்களிடம் லியோனல் மெஸ்ஸி மன்னிப்பு கேட்டுள்ளார்.
மன்னிப்பு கேட்கவும், திட்டமிடல் தவறான புரிதலுக்கான சர்ச்சையைத் தீர்க்கவும் மெஸ்ஸி ஒரு சிறிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அவர் சவூதி அரேபியாவிற்கு ஒரு விளம்பரப் பயணத்தில் இருந்தபோது பயிற்சியைத் தவறவிட்டார்
மேலும் அணிக்கு அன்றைய தினம் விடுமுறை என்று தான் நினைத்ததாக மெஸ்ஸி கூறினார்.
“வணக்கம், என்ன நடக்கிறது என்பதைப் பற்றி இந்த வீடியோவை உருவாக்க விரும்பினேன். முதலில், எனது அணியினர் மற்றும் கிளப்பில் மன்னிப்பு கேட்க்கிறேன்.
“நான் அரேபியாவிற்கு இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்தேன், அதை நான் முன்பு ரத்து செய்தேன், இந்த முறை என்னால் ரத்து செய்ய முடியவில்லை. மீண்டும், நான் செய்தவற்றிலிருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் , கிளப் என்ன முடிவு எடுக்கிறதோ அதற்காக நான் காத்திருப்பேன்” என்று பதிவிட்டார்.