பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஈழத்தமிழின படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவுதினம்
ஈழத்தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக இந்த முள்ளிவாய்க்கால் தினமானது காணப்படுகின்றது.
எமது மண்ணில் தமிழர்களுக்கான ஒரு விடிவு நோக்கிய ஒரு உன்னதமான போராட்டத்தின் இறுதி கட்டத்தில் நடந்த இன ஒழிப்பு, சீரழிப்பு, கொடுமைகள் என அனைத்தையும் ஒரே நாளில் அரங்கேற்றிய ஒரு கொடுமையான நாள் ஆகும்.
உலகத்தமிழர்கள் அனைவரினாலும் நினைவு கூரப்படும் இந்த நாளானது, இந்த வருடமும் பிரிதானியாவில் நினைவுகூருவதற்கான ஏற்பாடுகளினை பிரித்தானிய தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 18ஆம் திகதி 2023 வியழக்கிழமை இந்த நினைவு தினம் அனுஸ்டிப்பதற்காக மக்கள் அனைவரினையும் ஒன்று கூடுமாறு பிரித்தானிய பேரவையானது அழைப்பு விடுத்துள்ளது.
அதில் "ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், சுதந்திர வேட்கையோடு எம் மண்ணின் விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட,கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் அணி திரள்வோம் வாரீர்".
"தாயக விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம், அயராது செயல்படுவோம், சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவோம்."
என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிகழ்வானது மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் TRAFALGAR SQUARE, London WC2N 5DN இல் மதியம் 5.30 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து மாலை 7.30 மணிவரை நினைவு கூறப்பட உள்ளது.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
தொடர்புகளுக்கு:
பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)
02088080465