சுவிட்சரலாந்து சூரிச் மாநிலத்தில் கார் மோதியதில் 16 வயது இளம் பெண் படுகாயத்திற்குள்ளானாள்.
ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில், சூரிச் மாநிலத்தில்16 வயது இளம் பெண் மென்சிகென் ஏஜி என்ற இடத்தின் பிரதான வீதியைக் கடந்தாள், பாதசாரி கடவைக்கு அடுத்ததாக. அதே நேரத்தில் 84 வயது முதியவர் ரெய்னாச்சில் என்ற இடத்தில் இருந்து வந்துகொண்டிருந்தார்.
ஆர்காவ் மாநில காவல்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, ஓய்வூதியதாரர் மழையின் காரணமாக இளம்பெண்ணைப் பார்க்கவில்லையாதலால் அவள் மீது மோதியுள்ளார். அதனால் மோதுண்ட 16 வயது இளம் பெண் தரையில் வீசப்பட்டாள்.
இந்த விபத்தில் பெண்ணுக்கு மூளையதிர்ச்சி மற்றும் சிராய்ப்புகளுடன் காயங்கள் ஏற்பட்டன. அவசரமாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டது என சூரிச் மாநில பொலிசார் தெரிவித்ததுடன் வாகன சாரதியை அரசு வக்கீல் அலுவலகத்திற்கு பரிந்துரைத்து, அவரது சாரதி உரிமத்தை தற்காலிகமாக பறித்தனர்.