எங்கு பார்த்தாலும் கொலை, தமிழ் தேசத்தில் நடக்கும் கொலை சம்பவங்கள்,எப்படி ஏற்படுகிறது எதனால் ஏற்படுகிறது அலசுவோம் வாருங்கள்
கொலை,கொலை,கொலை எங்கு பார்த்தாலும் கொலை தமிழ் தேசம் கொலையிலும் தற்கொலையாலும் மாண்டு போய் கிடக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு?தொடரப்போகிறதா?இல்லை இதற்கு எதாவது தீர்வு இருக்கிறதா?அலசுவோம் வாருங்கள் lanka 4 ஊடகம் இவ்வாறான சட்டவிரோத செயற்படுகளை கட்டுப்படுத்த முழு மூச்சாக இறங்கியிருக்கிறது.
"நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி" என்றான் வள்ளுவன் இதன் பொருள் என்ன என்று பார்த்தால் நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால், எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமலிருத்தல் என்பதைக் கருதும் வாழ்க்கை நெறியே ஆகும். ஏன் இதை இப்போது இதை இங்கே கூறினேன் என்றால் எந்த உயிரையும் எடுக்கும் அதிகாரமும் வேண்டுதலும் எம்மவர்கள் எவருக்குமே இல்லை என்பதே நிதர்சனம்.
இருந்தபோதிலும் அதையும் மீறி இறைவனையும் மீறி எவன் உயிரையும் எப்போதும் எடுக்கலாம் என்ற உரிமை வழங்கப்பட்ட்து போல இப்போது எல்லாரும் கொலைகளை மிக சுலபமாக செய்து வருகிறார்கள் மக்கள் மனதில் நல் மனப்பாங்கு, இரக்ககுணம்,எளியோருக்கு உதவுதல் என மாறி அது இப்போது கொலை,களவு,வன்மம்,குரோத எண்ணம் என புதிது புதிதாக தலைவிரித்தாடுகிறது. அதிகமாக அபிவிருத்தி அடைந்து வரும் நகரங்களில் தான் இந்த கொலைகள் குரோதங்கள் எண்ணிலடங்காதவகையில் நடைபெறுகின்றன என்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அதிலும் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் ஆண்,பெண் ,குழந்தை சிறுவர்கள் என்ற வேறுபாடு இன்றி ஒரு நாளில் குறைந்தது 4 ,5 என்று கொடூரக்கொலைகள் நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது. கணவனை மனைவி வெட்டிக்கொலை, மனைவியை ஆட்கள் வைத்து அடித்துக்கொலை,குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு கொலை என ஒவ்வொரு நாளும் காலை விடியலாக இல்லாமல் கொலை விடியலாகவே தொடங்குகின்றது என்பதே கவலைக்குரிய விடயமாகும்.
இருப்பினும் யாழில் நடக்கும் பலகொலைகள் திட்டமிட்டு தான் நடக்கிறதா இல்லை தன்னிச்சையாக நடக்கிறதா?என்ற கேள்வி எழுகிறது தன்னிச்சையாக தான் நடக்கிறது என கூறவே முடியாது சரிசமனாக 2 விதங்களிலும் தான் கொலைகள் நடக்கின்றன, கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவியை பணம் கொடுத்து விபத்து உள்ளாக்க வைத்த கணவர் என்ற செய்தி அதிகளவில் பேசு பொருளானது.இது நிச்சயமாக திட்டமிட்டு செய்யப்படட கொலையாகவே இருக்கிறது. இருந்த போதிலும் அதிகளவாக சிறப்பாக திட்டமிட்டே நடக்கின்றன கொலைகள் என்பதே உண்மையாகும். பொருளாதார வளர்ச்சி ஆடம்பரவாழ்க்கை வருமானத்திற்கு ஏற்றாற்போல் குடித்தனம் நடத்த முடியாத ஆடம்பரங்களால் கணவன் மனைவி கொலைகள் நடக்கின்றன.
உதாரணமாக சூழ சார்ந்தவர்களின் சொகுசு வாழ்க்கை அதையும் தங்கள் வாழ விரும்புவதனால் முரண்பாடுகள் அதிகரித்து இவ்வாறான கொலைகள் தற்கொலைகள் நடக்கின்றன. பேராசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே இந்த கொலைகளையும் தற்கொலைகளை கணிசமான அளவு குறைக்க முடியும்.குறிகிய காலத்தில் மிகைப்படுத்தப்படட வசதியான வாழ்க்கை,ஆடம்பரங்கள் மேல் உள்ள மோகம் என் அமைத்தும் கொலை தற்கொலைகளுக்கு தூண்டுகின்றன. கணவனோ மனைவியோ தங்களின் வருமானத்திற்கு ஏற்றாற்போல் இல்லற வாழ்க்கையை பொறுப்புடனும் புரிந்துணர்வுடனும் நடத்தினால் சில கொடூரங்களை குறைக்கலாம்.விட்டுக்கொடுத்தல் ,பொறுமை,கோவத்தைக்கட்டுப்படுத்தல் என்பது ஒரு குடும்பத்தின் அடிப்படை இலக்கணமாக அமைகிறது.
அனால் இன்று அவற்றைக்காண முடிவதே இல்லை என்பது தான் கவலைக்குரிய விடயமாகும். பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களை தற்போது எம் நாடு அதிகளவிலேயே கொண்டுள்ளது தன்னுடைய உயிரையே விட்டுவிட நேர்வதானாலும் கூட, தான் மற்றொன்றினது இனிய உயிரைப் போக்கும் பாவச் செயலை எவரும் செய்யக் கூடாது என்பதே நியதி இருந்த போதிலும் இன்று இன்னோர் உயிரை எடுத்தாலும் தன்வாழ்க்கை சிறப்பாக வாழ்தல் சரி என்ற வன்ம வாதிகள் தான் அதிகரித்துக்காணப்படுகிறார்கள்.
இப்படி நம்மவர் மத்தியில் இனம் புரியாத கொலைவெறி அதிகரித்து வருவது சமூகத்தை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.எதிர்காலம் சிறப்பானதாக அமைய கடடயம் கொலைகளற்ற மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க்க வேண்டிய தலையாய கடமை எம்மவர் இடத்தில் தான் இருக்கின்றது என்பதை ஆணித்தரமாக மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
- சிந்து -