சுவிஸர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரும் நடைமுறை!
சுவிஸர்லாந்தில் அகதிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுவிஸர்லாதிற்கு இலங்கையர்களை விட ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் ஆபிரிக்க நாடுகளில் இருந்து சுவிஸ் நாட்டிற்கு அகதி அந்தஸ்து கோரி வருகின்றனர்.
அதைவிட தற்போது ரஷ்ய உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் அகதிகள் அதிகளவானோர் சுவிஸில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் சிலருக்கு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு வருவதனால் அவர்கள் சட்டத்தரணிகளை நாடி 20, 30 ஆயிரம் பிராங்குகளை செலவு செய்து வழக்குகளை வாதாடி வருகின்றனர்.
இந்தநிலையில் அவர்களுக்கு சிலவேளைகளில் அவர்களுக்கு N என்ற விசாவும் F என்ற விசாவும் அதைவிட சிலருக்கு வழக்கு ஏற்க்கப்பட்டு அகதி அந்தஸ்து கோருகின்ற D என்ற வகை விசாவும் கொடுக்கப்படுகின்றது.
பல காலங்களாக சுவிஸ்சர்லாந்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் அதை கருத்தில் கொண்டு அவர்களுடைய வழக்கை ஏற்பதற்கோ நிராகரிப்பதற்கோ முடியாத கட்டத்திலே அவர்களுக்கு தொழில் செய்யக்கூடிய E விசாக் கொடுக்கப்படுகின்றது.
இதைவிட S என்ற விசாவும் அகதி அந்தஸ்து அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படுகின்றது.
அகதி அந்தஸ்து அனுமதிக்கப்பட்ட D விசா உள்ளவர்கள் தமது சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளிற்கு செல்லலாம் ஆனால் தமது சொந்த நாட்டிற்கு செல்ல முடியாது.
நாடு இவர்கள் என்ற அடிப்படையிலேயே குறித்த விசாக் கொடுக்கப்படுகின்றது. அகதி அந்தஸ்து அனுமதிக்கப்பட்ட D விசா உள்ளவர்களுக்கு நீல நிறத்திலான கடவுச் சீட்டு கொடுக்கபப்டுகின்றது.
அவரகள் விரும்பினால் சாதாரண கடவுச் சீட்டிற்கு அதை மாற்றிக் கொள்ள முடியும். இந்த அடிப்படையிலேயே பலர் சுவிஸில் இருந்து கொண்டு ஒரு மாத விசாவான பேப்பர் விசாவில் புதுப்பித்துக் கொண்டு சுவிஸில் இருக்கின்றனர். குறித்த பேப்பர் விசாவில் இருப்பவர்களை அகதி அந்தஸ்து நிராகரிக்கபப்ட்டுள்ளது என கூறி இரவோடு இரவாக அவர்கள் நாடுகடத்தப்படுகின்றார்கள்.
இதில் பல இலங்கையர்களை உள்ளடங்குகின்றர். இவ்வாறு அனுப்பப்படுவோரில் போதைவஸ்த்தை பாவனையாளர்களுக்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுப்பட்டவர்களையும் இவ்வாறு நாடுகடத்தப்படுகின்றனர்.
இதேவேளை அகதி அந்தஸ்து கோருகின்ற F N விசா வைத்திருப்பவர்கள் உங்களுடைய வசிப்பிடத்தினை பாதுக்காப்பாக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு இல்லாதவிடத்து காவல்துறையினரால் நாடுகடத்தப்படுவீர்கள். அதனால் உங்களுடைய இடங்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.