சித்தார்த் நடிக்கும் புதிய படம் 'சித்தா!'

#Cinema #TamilCinema #2023
Mani
3 years ago
சித்தார்த் நடிக்கும் புதிய படம் 'சித்தா!'

சித்தார்த் தற்போது 'சித்தா' என்ற தலைப்பில் தயாரிப்பில் உள்ள புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தை எழுதி இயக்குகிறார் எஸ்.யு. அருண்குமார் இதற்கு முன் 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கியவர். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் 'சித்தா' படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 'காதலில் சொதப்புவது எப்படி?', 'ஜில் ஜங் ஜக்' ஆகிய படங்களை எடுத்த எடக்கி எண்டர்டெயின்மெண்ட் 4-வது படைப்பாக 'சித்தா' படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை பல மொழிகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4