IPL Match57 - 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வி

#India #IPL #T20 #Gujarat #Mumbai
Prasu
1 year ago
IPL Match57 - 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வி

ஐபிஎல் கிரிகெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச முடிவு செய்தது. மும்பை அணிக்கு இஷான் கிஷன் மற்றும் ரோகித் ஷர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. 

தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 20 பந்துகளில் 31 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா 18 பந்துகளில் 29 ரன்களை குவித்தார். மூன்றாவது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 103 ரன்களை குவித்தார். 

இறுதியில், 20 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 218 ரன்களை குவித்தது. குஜராத் சார்பில் ரஷீத் கான் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 

குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரித்திமான் சகா, ஷுப்மன் கில் முறையே 2 மற்றும் 6 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 ரன்களுக்கு நடையை கட்டினார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 14 பந்துகளில் 29 ரன்களை விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் தன் பங்கிற்கு 26 பந்துகளில் 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

பின் ராகுல் தெவாட்டியா 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் ரஷீத் கான் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் 32 பந்தில் 10 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 79 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

9வது விக்கெட்டுக்கு ரஷித் கான், அல்ஜாரி ஜோசப் ஜோடி 88 ரன்கள் குவித்தது. இறுதியில், குஜராத் அணி 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!