சுவிட்சர்லாந்தில் பாரிய தாதிமார் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது - சுமார் 15,000 தாதிமார் தேவைப்படுகின்றனர்.
#Switzerland
#Lanka4
#சுவிட்சர்லாந்து
#லங்கா4
Mugunthan Mugunthan
1 year ago
சுவிட்சர்லாந்தில் பாரிய தாதிமார் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. சுமார் 15000 திறமை வாய்ந்தவர்களை பணிக்கமர்த்த எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு சுவிஸ் தாதியர் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிறந்த ஊதியம், வேலை நேரத்தைக் குறைத்தல், கூடுதல் விடுமுறை நாட்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மானியங்கள் போன்றவற்றை சங்கம் தற்போதுகோருகிறது.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, மத்திய சுவிட்சர்லாந்தில் மட்டும் 2029 ஆம் ஆண்டிற்குள் 14,000 கூடுதல் தாதியர் தேவைப்படுவதாக சுவிஸ் பொது ஒலிபரப்பான SRF தெரிவித்துள்ளது.
லூசெர்ன் மாநில மருத்துவமனையானது கோடைகாலத்திற்கான தொழிற்பயிற்சிக்கான இடங்களை மட்டுமே நிரப்பியுள்ளது.
தொற்றுநோய்க்குப் பிறகு பயிற்சியின் தரம் மோசமடைந்துள்ளதாக சுவிஸ் தாதியர் சங்கம் புகார் கூறியுள்ளது.