ஆர்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

#Cinema #Actor #TamilCinema
Mani
3 years ago
ஆர்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சித்தி இத்னானி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 

ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

 இந்த நிலையில் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4