யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள் ரிஷப ராசிக்காரர்கள்!- இன்றைய இராசிபலன்

#Astrology #Lifestyle
Mayoorikka
3 years ago
யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள் ரிஷப ராசிக்காரர்கள்!- இன்றைய இராசிபலன்

மேஷம்

 நன்மைகள் நடைபெறும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

 ரிஷபம்

 யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.

 மிதுனம்

 தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அதிகார பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

 கடகம்

 யோசித்து செய்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களால் பிரச்சினைகள் உருவாகும். காலை நேரத்திலேயே விரயங்கள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

 சிம்மம்

 கைநழுவி சென்ற வாய்ப்புகள் கைகூடிவரும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக நடைபெறும். மனக் கசப்பு மாறும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

 கன்னி

 எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் ரீதியாக புதியஅனுபவங்கள் ஏற்படலாம். நண்பர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

 துலாம்

 சவால்களை சமாளிக்கும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்தி உண்டு. மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதியை தரும்.

 விருச்சகம்

 லாபகரமான நாள். தொழிலில் வருமானம் திருப்தி தரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் விருப்ப ஒய்வில் வரலாமா என்று யோசிப்பீர்கள்.

 தனுசு

 தடைகள் அகலும் நாள். தன வரவு திருப்தி தரும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

 மகரம்

 முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும் நாள். ஏட்டிக்கு போட்டியாக நடந்தவர்கள் இன்று மனம் மாறுவர். கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் உங்களை மதித்து பேசுவர்.

 கும்பம்

 யோகமான நாள். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். விவாக பேச்சுகள் முடிவாகலாம்.

 மீனம்

 மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல்கிடைக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4