நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாள் ஆசையொன்று நிறைவேறும் நாள் மிதுனராசிக்காரர்களே!- இன்றைய ராசி பலன்

#Astrology
Mayoorikka
3 years ago
நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாள் ஆசையொன்று நிறைவேறும் நாள் மிதுனராசிக்காரர்களே!- இன்றைய ராசி பலன்

மேஷம்

 நட்பால் நன்மை கிடைக்கும நாள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். திருமண முயற்சிகள் கை கூடிவருவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் ரீதியான பயணம் பலன் தரும்.

 ரிஷபம்

 சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரலாம்.

 மிதுனம்

 நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பணி உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

 கடகம்

 கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். கனிவாக பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். தொழில் பணியாளர்களுடன் ஏற்பட்ட பனிப்போர் விலகும். உத்தியோக முயற்சி பலன் தரும்.

 சிம்மம்

 நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்கும் நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

 கன்னி

 நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலை கொடுக்கும் நாள். நாடு மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். விரயம் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.

 துலாம்

 பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பயணத்தால் பலன் கிடைக்கும்.

 விருச்சகம்

 முன்னேற்றம் கூடும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்லவிதமாக அமையும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

 தனுசு

 வரவு திருப்தி தரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப பிரச்சினை தீர சில அனுபவமிக்கவர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

 மகரம்

 மனக்குழப்பம் அகலும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே முடிவடையும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

 கும்பம்

 மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பில் அக்கறை காட்டுவீர்கள்.

 மீனம்

 நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். வரவு வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உருவாகும். நண்பர்கள் பகையாகலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4